TamilSaaga

சிறப்பாக செயல்பட்ட JGI திட்டம்.. சிங்கப்பூரில் பணியமர்த்தப்பட்ட 270,000 உள்ளூர்வாசிகள்

சிங்கப்பூரில் இவ்வாண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி இதுவரை 270,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்புவாசிகள், வேலை வளர்ச்சி ஊக்கத்தொகையின் ஆதரவுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று தெரிவித்தார்.

கூடுதலாக மனிதவள அமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள 2 லட்சத்து 70 ஆயிரம் பேரில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் கடந்த 6 மாதமாக வேலை இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 40 வயதை நெருங்கிய பணியாளர்களும் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்வான 2,70,000 பேரில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் 50 வயதை தாண்டியவர்கள் என்றும் அமைச்சர் கூறினார். அதேபோல வேலை வளர்ச்சி ஊக்கத்தொகையின் ஆதரவுடன் பணியமர்த்தப்பட்டுள்ள பல பணியாளர்கள் முன்பு வேலை செய்த இடங்களில் வாங்கிய சம்பளத்தை விட அதிக சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

உள்ளூர் பணியாளர்களை பணியமர்த்துவதை விரிவுபடுத்தவும், இந்த விஷயத்தில் முதலாளிகளை ஊக்குவிப்பதற்காகவும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் JGI எனப்படும் வேலைகள் வளர்ச்சி ஊக்கத்தொகை
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts