TamilSaaga

இதாண்டா சிங்கப்பூர் போலீஸ்…அந்தரத்தில் பரிதவித்த கட்டுமான தொழிலாளி… விரைந்து வந்து உதவிய சிங்கப்பூரின் குடிமை தற்காப்பு படை!

சிங்கப்பூரில் கட்டுமான துறையில் பணிபுரியும் ஊழியர்களின் தியாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உண்மையில் சொல்ல போனால் உயிரை பணயம் வைத்து தான் கட்டுமானத்துறையில் பணிபுரியும் பல ஊழியர்களும் வேலை பார்க்கின்றனர். பணியிடங்களில் ஏற்படும் பல மரணங்களை இதற்குச் சான்றாகும். இந்நிலையில் அப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் சிங்கப்பூரின் குடிமை தற்காப்பு காவலர்கள் கட்டுமான ஊழியர் ஒருவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் TUAS பகுதியில் உள்ள ஓர் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இதில் 40 மீட்டர் உயரத்தில் செயல்படும் வெயிட் லிப்டரின் மேல் இருந்த ஊழியருக்கு உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதால் அவரால் இயங்கி வர முடியவில்லை. இதைப் பற்றிய தகவல்களை உடனடியாக கட்டுமான பணி மேற்பார்வையாளர் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரிடம் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு உடனே வந்த வீரர்கள் ஏணியை பயன்படுத்தி லிப்ட்டுக்கு மேல் ஏறினர். பின்பு மீட்பு உபகரணங்களை கொண்டு தொழிலாளியை பத்திரமாக வெட்டில் வைத்து கட்டி பாதுகாப்பாக கீழே இருக்கிறார். பின்பு அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பணியிடத்தில் அசம்பாவிதம் ஏற்படுத்தாமல் விரைவாக வந்து உதவிய சிங்கப்பூர் தற்காப்பு படையினரின் செயல் பாரடத்தக்கதாகவும் என அனைவரும் கூறி வருகின்றனர்.

Related posts