உலகின் பல நாடுகளில் இருந்து வந்திருந்தாலும், சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்த பிறகு இங்கு அனைவருமே சமம் தான். அந்த வகையில் சிங்கையில் பணிபுரியும் ஒரு இந்திய ஊழியர் மற்றொரு வெளிநாட்டு ஊழியருக்கு உதவிய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. STOMP நிறுவனம் இது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரின் புக்கிட் பாடோக்கில் சாலையோரம் Purse ஒன்றை கண்டு ஒருவர், அதன் உரிமையாளருடன் அந்த பொருளை மீண்டும் இணைக்க கொஞ்சம் சிரமப்பட்டுள்ளார் என்று தான் கூறவேண்டும். ஷெங் சியோங்கில் பணிபுரியும் சியா யி கூறுகையில், “கடந்த செவ்வாய்கிழமை எனது பணப்பையை தொலைத்துவிட்டேன். அதில் எனது அடையாள அட்டை (IC), பணி அனுமதி, ஓட்டுநர் உரிமம் மற்றும் வங்கி அட்டை ஆகியவை இருந்தன” என்றார்.
இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகாரும் அளித்தார், ஆனால் அவர் Purse காணாமல் போன அடுத்த நாள் அவருக்கு கிடைத்த ஒரு செய்தி அவரை ஆச்சர்யத்தில் உறையவைத்துள்ளது. “புதன்கிழமை காலை கிராஞ்சி பஸ் டிப்போவில் உள்ள ஒரு SMRT பஸ் கேப்டன், சாலையோரத்தில் கிடந்த தனது பணப்பையை கண்டுபிடித்துள்ளார் என்ற செய்தி தான் அது.
சிங்கப்பூரில் பணி செய்து வரும் அந்த பஸ் கேப்டன் ஒரு இந்தியர், சுரீஷ்குமார் என்ற அந்த நபர் கீழே கிடந்த பணப்பையை பார்த்துள்ளார், அதில் உள்ள பணி அனுமதிச் சீட்டைப் பார்த்து அந்த நபரின் பணியிடத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
உடனே google மூலம் அந்த நிறுவனத்தின் தலைமையகத்தை கண்டுபிடித்து பிறகு போன் செய்து உங்கள் ஊழியர் ஒருவரின் பணப்பை கீழே கிடக்கின்றது என்றும் தகவல் கொடுத்துள்ளார். உடனே தலைமையகம் Purseஐ தொலைத்த நபரை அழைத்து குமாரின் நம்பரை கொடுத்துள்ளது.
SMRT மூத்த பஸ் கேப்டனும் வழிகாட்டியுமான சுரிஷ்குமார், பணப்பையை தனிப்பட்ட முறையில் அவரிடம் திருப்பித் தருவதற்கான முயற்சியை தான் எடுத்ததாகவும், ஏன் என்றால் இத்தனை ஆவணங்களையும் தவறவிட்ட ஒருவர் என்ன மனநிலையில் இருப்பார் என்று தனக்கு தெரியும் என்றும் STOMPநிறுவனத்திடம் கூறினார்.
மாலை 3 மணியளவில் குமாருக்கு வேலை முடிந்த நிலையில் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பணப்பையை தொலைத்தவரை நேரில் சென்று கண்டு அவருடன் அவரது பொருளை ஒப்படைத்துள்ளார். ஒருவருக்கு நாம் உதவிக்கொள்ளவேண்டும் என்பதை குமார் நிரூபித்துள்ளார்.
News Source : STOMP