TamilSaaga

விசித்திரமான Bag.. சிங்கப்பூர் தெருக்களில் வலம்வரும் “அதிசய மனிதர்”.. ஏன்? – புதியதோர் அம்சத்தை சிங்கையில் வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்

சமீபத்தில் சிங்கப்பூர் தெருக்களில் மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மனிதரையும் அவரது முதுகில் உள்ள பையையும் நீங்கள் கண்டிருந்தால், எதிர்காலத்தில் நிச்சயம் நீங்களும் உங்களையே ஆப்பிள் Mapsல் காண வாய்ப்புகள் மிக அதிகம்.

சமீபத்தில் சிங்கப்பூர் ஆறாவது அவென்யூ மற்றும் யிஷுனில், விசித்திரமான ஒரு பையுடன் வலம்வந்த ஒருவரை கண்டபோது பொதுமக்கள் பலர் குழப்பமடைந்தனர். சிங்கப்பூர் பயனர்களுக்காக ஆப்பிள் மேப்ஸ் செயலியில் சில மேம்பாடுகளை கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஆப்பிள் அறிவித்தபோது இந்த மனிதனை பற்றிய ரகசியம் வெளியானது.

Navigation அமைப்புகளை மேம்படுத்தவும், சிங்கப்பூரில் உள்ள சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் பற்றிய விரிவான பார்வைகளை வழங்கவும், ஆப்பிள் தரைவழி ஆய்வுகள் மூலம் தரவுகளை சேகரித்து வருகிறது. (இது google மற்றும் பிற map சேவை நிறுவனங்களால் நடத்தப்படும் ஒன்று தான்)

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர்.. ஏப்ரல் 26 முதல் அமலாகும் புதிய தளர்வுகள் – ஒரு Complete Report

முதுகில் ஒரு விசித்திரமான பையை அணிந்து கொண்டு தெருக்களை Survey செய்வதை “Pedestrian Survey என்று அழைப்பார்கள், பொதுவாக கார்களில் சென்று இந்த Map சேவை update செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த Pedestrian Survey மூலம் தான் நீங்கள் அதிதுல்லியமாக, நீங்கள் பயன்படுத்தும் Mapsகளில் Street Viewககளை பார்க்கமுடிகிறது என்பது நினைவுகூரத்தக்கது. தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், சிங்கப்பூரில் புதிய Map அப்டேட்டிற்காக ஜனவரி 1, 2022 முதல் இந்த புதிய மேப்பிங் செயல்பாட்டை செய்து வருகிறது.

Work Permit வைத்திருக்கும் இந்திய ஊழியர்களுக்கு “Mega Happy News”.. சிங்கப்பூருக்குள் நுழைய இனி Entry Approval தேவையில்லை – தலையெழுத்தை மாற்றும் MOM-ன் அறிவிப்பு

புதிய அம்சம்

இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் வரைபடங்கள் கார்டன்ஸ் பை தி பே மற்றும் தியோங் பாரு சந்தை போன்ற இடங்களின் முப்பரிமாணக் காட்சிகளையும் பயனாளர்களுக்கு அளிக்கும். iOS 15 உடன், பயனர்கள் தங்கள் ஐபோன் மூலம் தங்களைச் சுற்றியுள்ள கட்டிடங்களை ஸ்கேன் செய்து, மேற்குறிய அந்த சேவைகளை அனுபவிக்க முடியும். இந்த புதிய அம்சத்தை சிங்கப்பூரர்கள் அதி விரைவில் அனுபவிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts