இன்று சிங்கப்பூரில் இருந்து தமிழக தலைநகர் சென்னை நோக்கி (ஏப்ரல் 7) மாலை 5 மணிக்கு புறப்படவிருத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை விமான சேவை நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக காலை சிங்கப்பூரில் இருந்து தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நரகங்களுக்கு புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் எந்தவித பிரச்னையும் இல்லை. ஆனால் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வர நினைக்கும் பல தொழிலாளர்கள் மாலை நேரத்தில் செயல்படுத்தப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் தான் அதிகம் பயணிக்கின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இப்படி ஒரு சூழல் இருக்க, மாலை நேரத்தில் இறப்பு போன்ற அவசர தேவைகளுக்காக தாயகம் திரும்ப நினைக்கும் பயணிகள் இது போன்று ஏற்படும் தாமதங்களால் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் உண்மை. ஆகையால் தொடர்ந்து மாலை நேர விமானங்கள் இப்படி தாமதமானால் அவசர தேவைகளுக்காக பயணிக்கும் பயணிகளின் நிலை கேள்விக்குறியே.
டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனம் சென்ற பிறகு பல மாற்றங்கள் ஏற்படும் என்று மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்துவரும் இந்த நேரத்தில் தொடர்ச்சியாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் குழும விமானங்களில் பிரச்சனைகள் ஏற்படுவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியள்ளது. இருப்பினும் மாற்றங்கள் ஏற்பட கொஞ்சம் காலம் பிடிக்கும் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
விரைவில் விமான சேவைகளில் எந்தவித தடையும் இன்றி பயணிகள் சீராக பயணிக்க ஏர் இந்தியா நிறுவனம் ஆவணம் செய்யும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091