TamilSaaga

“சிங்கப்பூரின் VTL திட்டம்” : மேலும் பல நகரங்களுக்கு VTL விமானங்களை இயக்க Singapore Airlines திட்டம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் ஆம்ஸ்டர்டாம், பார்சிலோனா, கோபன்ஹேகன், பிராங்பேர்ட், லண்டன், மிலன், மியூனிக், நியூயார்க், பாரிஸ், ரோம், சியாட்டில் மற்றும் வான்கூவர் ஆகிய இடங்களிலிருந்து விமானங்களை இயக்கவிருப்பதாக இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) அடுத்தாண்டு ஜனவரி 17 முதல் கூடுதல் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை (VTL) விமானங்களைத் திறக்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதல் பயணிகளுக்கு அதிக விமான Optionகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் SIA, Scoot நிறுவன விமானிகள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு திரும்புகின்றனர்

அடுத்தாண்டு ஜனவரி 19 முதல், ஹூஸ்டன் மற்றும் மான்செஸ்டரிலிருந்தும் இது போன்ற விமானங்களை அது இயக்கும். மேலும் கோலாலம்பூரில் இருந்து VTL விமானங்கள் நவம்பர் 29 முதல் தொடங்கும் என்று SIA முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 6ம் தேதிக்குள் சிங்கப்பூர், மொத்தம் 21 நாடுகளுடன் தன்னுடைய VTLகளுக்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும்.

இந்தோனேசியா மற்றும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளும் நவம்பர் 29 முதல் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் திங்களன்று அறிவித்தார். கூடுதலாக, கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் பயணிகள் டிசம்பர் 6 முதல் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

ஸ்வீடன் மற்றும் பின்லாந்தில் இருந்து VTL விமான சேவை வரும் நவம்பர் 29 அன்று தொடங்கும். VTL திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் வீட்டில் தங்குவதற்கான அறிவிப்பை வழங்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், வருகைக்குப் பிறகும் பெருந்தொற்று நெகட்டிவ் சோதனை செய்ய வேண்டும்.

Related posts