சிங்கப்பூரில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து முதன்முறையாக, இங்குள்ள இஸ்லாமிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரம்ஜானின் போது 500 பேர் வரை ஒன்று கூடி ஒரு பெரிய குழுவாக தங்கள் சிறப்பு இரவுத் தொழுகைகளை (terawih) செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கிராஞ்சி பொழுதுபோக்கு மையத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் வெள்ளிக்கிழமை இரவு பிராத்தனைகளை வரும் ஏப்ரல் 29 வரை அடுத்த மூன்று வெள்ளிக்கிழமைகளுக்கு தங்கள் பிராத்தனைகளை அங்கு செலுத்தலாம்.
மேலும் அந்த 500 தொழிலாளர்களுக்கு அங்கேயே உணவுவும் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் அவர்கள் ஒன்றாக தங்கள் Iftarஐ அனுசரிக்கமுடியும். ரம்ஜான் முடிவடைவதைக் குறிக்கும் விதமாகவும், ஹரி ராயா ஐதில்பித்ரியைக் கொண்டாடுவதற்காகவும் வருகின்ற மே 3ம் தேதி துவாஸ் பொழுதுபோக்கு மையத்தில் ஒரு நிகழ்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 29ம் தேதி அளிக்கப்பட்ட தளர்வுகளை அடுத்து இந்த ரம்ஜான் தொழுகைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம் அருகில் இருந்தவாறே தொழுகைகளை நடத்தலாம்.
கடந்த வாரம் க்ராஞ்சி பொழுதுபோக்கு மையத்தில் 500 தொழிலாளர்களை கொண்டு தொழுகைகள் நடந்த நடத்த ஏற்பாட்டாளர்கள் தயாரானார்கள். தொழுகைக்கு வரும் அனைவருக்கும் இலவச உணவுவும் தொண்டு நிறுவனம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டுமே அப்போது வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று திங்களன்று, ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த MOM, கடந்த வார ரமலான் தொழுகை நிகழ்வின் விவரங்கள் தாமதமாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும், ஆகையால் நிகழ்வின் நாளான வெள்ளிக்கிழமை காலையில் தான் அருகிலுள்ள தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் நிகழ்வு பற்றிய தகவல் பகிரப்பட்டது என்றும் கூறியது.
இதன் காரணமாகத்தான் கடந்த வாரம் குறைந்த அளவிலான தொழிலாளர்கள் மட்டும் கலந்துகொண்டதாகும், இனி வரும் வாரங்களில் அதிக அளவிலான தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்தது.