TamilSaaga

இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் மவுண்ட் ஃபேபர் திட்டம் – நிலவரம் என்ன ?

சிங்கப்பூரில் மவுண்ட் ஃபேபர் மழை ரயில் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானத்தை தொடங்காத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இது குறித்து எந்த முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலே இழுக்கப்படவும் கீழே இறக்கவும் இந்த Rope Car எனப்படும் கம்பி ரயில் முறை செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நகர மறுசீரமைப்பு ஆணையத்தால் வெளியிடப்பட்ட தெற்கு நீர்முகப்பு பெரும்பாதை திட்டத்தில் இடம்பெற்றிருந்தது.

சுற்றுலா பயணிகளும் மற்றவர்களும் மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு கொண்டு சென்று திரும்பும் கம்பிவட ரயில் சேவை 2023-ம் ஆண்டுக்குள் தொடங்கப்பட்டுவிடும் என்று மவுண்ட் ஃபேபர் பொதுப்போக்குவரது குழு தெரிவித்தது.

இது குறித்து அந்த பொதுப்போக்குவரது குழு வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் 2019 டிசம்பர் 20ஆம் தேதி திட்ட அனுமதி விண்ணப்பத்தை சமர்பித்தோம். அதற்கு முன்னதாக நாங்கள் சுற்றுப்புறவியல் தாக்க மதிப்பீடு, போக்குவரத்து தாக்க மதிப்பீடு, திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வு எனும் மூன்று ஆய்வு முடிவுகளை சமர்ப்பித்தோம்.

இருப்பினும் இந்த திட்டம் குறித்து எந்தவித தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து ஸ்ட்ரெயிட் டைம்ஸ் செய்தி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுகுறித்து நகர மறுசீரமைப்பு ஆணையத்திடமும் தேசிய பூங்காக் கழகத்திடம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் அளித்த அந்த ஆணையங்கள் சம்மந்தப்பட்ட ஆணையங்களுடன் இதுகுறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறியது.

Related posts