SPCA சிங்கப்பூர் அமைப்பு பசை பொறிகள் மற்ற விலங்குகளை, குறிப்பாக பூனைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் ஒரு Facebook பதிவை தற்போது வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட அந்த பதிவின்படி, வரம் தோறும் சிங்கப்பூரை சுற்றியுள்ள விலங்கு காப்பகத்திற்கு Glue Trapபில் சிக்கிய பூனைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் அளித்த தகவலில், ஒரு விலங்கு இந்த பொறிகளில் சிக்கினால், அவைகளின் போராட்டம் மிகக்கொடுமையானது என்றும். அவற்றை காப்பாற்ற முற்படும்போது “அவைகளின் தோலில் இருந்து உரோமகள் கிழிக்கப்படுகிறது” என்றும் கூறியுள்ளனர்.
பசை அதிகமாக இருந்தால் மற்றும் விலங்குகள் சுதந்திரமாக நகரமுடியவில்லை என்றால், ஒருகட்டத்தில் அவை தங்கள் உயிரை கூட இழக்க நேரிடும்என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே தயவு செய்து இந்த பசை பொறிகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
எலிகளை பிடிக்க வைக்கப்படும் இந்து போன்ற பொறிகளில் எலிகளை தவிர எல்லாவித உயிரங்களும் சிக்கி தவிப்பது சிங்கப்பூரில் அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது என்று தான் கூறவேண்டும். தயவு செய்து சிங்கை மக்கள் இதுபோன்ற பொறிகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.