மலேசிய ஊடகங்கள் அளித்த தகவலின்படி கார் ஓட்டுநரின் கழுத்தை அறுத்த சந்தேகத்தின் பேரில் 16 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட அந்த 63 வயதான ஓட்டுநர், கடந்த ஏப்ரல் 13ம் தேதி ஜோகூரில் இருந்து அந்த இளம்பெண்ணை கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றார்.
MyCar செயலி மூலம் இந்த பயணம் புக் செய்யப்பட்ட நிலையில், அந்த இளம் பெண், ஓட்டுநருக்கு 400 ரிங்கிட் கட்டணம் செலுத்த ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் சென்றடைய வேண்டிய இடத்தை அடைந்ததும் தன்னிடம் பணம் இல்லாததால் 400 ரிங்கிட் தரமுடியாது என்றும் அந்த இளம் பெண் கூறியுள்ளார்.
இறுதியில் அந்த பெண் பணம் தர மறுத்ததால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார் அந்த ஓட்டுநர். செய்வதறியாது நின்ற அந்த இளம்பெண் சட்டென்று தனது பையில் இருந்து சிறிய கத்தி ஒன்றை எடுத்து ஓட்டுநரின் கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.
வழிந்தோடிய ரத்தத்துடன் அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு காரை ஓட்டிச்சென்று புகார் அளித்த ஓட்டுநர், இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பெயரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இறுதியாக மூன்று நாட்கள் கழித்து அந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.