சிங்கப்பூரில் பரபரப்பாக இயங்கும் MRT ஸ்டேஷன்களில் ஒன்று ‘புவன விஸ்தா’ சுரங்க ரயில் நிலைய பாதை ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை புவனவிஸ்தா சுரங்கப்பாதை சுவற்றில் மர்மமான முறையில் பெயிண்டை வைத்து யாரோ சுவற்றில் எழுதி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் செல்வதற்குள் அந்த கிறுக்கல்களில் பாதி பகுதி அறிந்திருந்தது.
கிறுக்கல்களில் W மற்றும் F எனப்படும் ஆங்கில எழுத்துக்களுக்கு இடையே தூக்கிலிடப்பட்ட நபரின் வரைபடம் இடம்பெற்று இருந்தது. மேலும் மர்மமான முறையில் ஏதேதோ எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. சிங்கப்பூரை பொறுத்தவரை பொது இடங்களில் சுவர்களில் கிறுக்குவது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஏற்கனவே ஏப்ரல் மாதம் இதே போன்று வேறொரு ரயில் நிலையத்தில் கிறுக்கல்கள் இடம்பெற்றிருந்தன.
எனவே இரண்டாவது முறையாக இச்சம்பவம் நடைபெறுவதை அடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் காவல்துறையினரை முடுக்கியுள்ளது. நம் ஊர்களில் கோவில்கள், பொது இடங்கள் மற்றும் செல்லும் இடங்களில் எல்லாம் பல கிறுக்கல்களை பார்த்திருப்போம். பொது சுவரில் ரயில் நிலையத்தில் கிறுக்கியதற்கே இந்த அளவிற்கு விசாரணை மேற்கொள்ளும் சிங்கப்பூர் அரசின் தூய்மையானது பாராட்டத்தக்கதாகும்.