TamilSaaga

“வாடிக்கையாளர்கள் பற்றவைத்த நெருப்பு”.. சிங்கப்பூரில் ‘இனி கூடுதல் கட்டணம் கிடையாது’ என்று பின்வாங்கிய Visa Credit Card – செம!

SINGAPORE: புதிய ஒப்பந்தம் காரணமாக, அமேசானின் சிங்கப்பூர் இணையதளத்தில் பொருட்கள் வாங்க, சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் தங்கள் விசா கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இந்த தளர்வு இன்று (பிப்.17, 2022) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து அமேசான் தனது சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், “சமீபத்தில் Visa நிறுவனத்துடன் உலகளாவிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம் (global agreement), இது அனைத்து வாடிக்கையாளர்களும் எங்கள் கடைகளில் அவரவர்களின் விசா கிரெடிட் கார்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக, Amazon.sg இல் விசா கிரெடிட் கார்டு மூலம் பர்சேஸ் செய்வதற்கு இனி கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது.

அமேசான் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 அன்று தனது சிங்கப்பூர் இணையதளத்தில் விசா கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 0.5 சதவீத கூடுதல் கட்டணத்தைச் சேர்த்தது.

மேலும் படிக்க – “கொடுத்து வைத்த சிங்கப்பூர் மக்கள்”.. 166,300 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை காப்பாற்றிய கோவிட்-19 ஆதரவு நடவடிக்கைகள் – நிதித்துறை அமைச்சகம் “சபாஷ்” அறிவிப்பு

அமேசான் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்ட அறிவிப்பில், “கூடுதல் கட்டணம் Amazon.sg இல் third parties-களால் விற்கப்படும் ஆடைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களுக்கு பொருந்தும்” என்று கூறியது. சிங்கப்பூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து third parties-களால் விற்கப்படும் பொருட்களுக்கு இது பொருந்தும் என்று தெரிவித்தது.

இருப்பினும், அமேசான் ஃப்ரெஷ் வழங்கும் மளிகைப் பொருட்கள், அமேசான் சர்வீஸ் ட்விச்சில் உள்ள ஆப்ஸ் பர்ச்சேஸ்கள் போன்ற டிஜிட்டல் பொருட்கள் மற்றும் சேவைகள், அமேசான் பிரைம் போன்ற சந்தா திட்டங்கள் ஆகியவை கூடுதல் கட்டணத்தால் பாதிக்கப்படாது என்றது.

இந்நிலையில், Amazon மற்றும் Visa நிறுவனங்களிடம், ஒரு வாடிக்கையாளர் தனது கார்டைப் பயன்படுத்தும் போது செலுத்தும் கட்டணங்கள் தொடர்பாக கடும் புகார்கள் முன்வைக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து பல புகார்கள் அனுப்பப்பட்டன.

வாடிக்கையாளரின் வங்கி அந்தக் கட்டணத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ளும் போது, வணிகர்களிடம் வசூலிக்கப்படும் அளவை Visa நிறுவனம் தான் நிர்ணயிக்கிறது என்று ப்ளூம்பெர்க் கூறுகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூரின் Redhill, Tiong Bahru MRT நிலையங்களுக்கு அருகில் காத்திருக்கும் “சர்பிரைஸ்” – மே மாதம் தொடக்கம் – கைப்பற்ற முண்டியடிக்கும் மக்கள்

இந்நிலையில், “Visa நிறுவனம், அமேசானுடன் ஒரு உலகளாவிய ஒப்பந்தத்தை எட்டியதில் மகிழ்ச்சி அடைகிறது” என்று அதன் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த ஒப்பந்தம் மூலம் இனி அனைத்து அமேசான் கடைகள் மற்றும் தளங்களில் விசா கிரெடிட் கார்டு ஏற்றுக் கொள்ளப்படும். எதிர்காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான கட்டண அனுபவங்களை உறுதி செய்வதற்கான புதிய தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளில் ஒத்துழைப்பதற்கான கூட்டு அர்ப்பணிப்பும் இதில் அடங்குகிறது” என்று Visa செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஆக, இனிமேல் அமேசானின் சிங்கப்பூர் இணையதளத்தில் பொருட்கள் வாங்க, சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் தங்கள் விசா கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts