TamilSaaga

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தமாக 42 லட்சத்தை சுருட்டிய மர்ம ஆசாமி… சென்னை போலீஸ் வலைவீச்சு!

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏஜென்ட்கள் ஏமாற்றும் சம்பவம் அடிக்கடி நாம் கேள்விப்படுவது ஒன்றுதான். ஆனாலும், இந்த சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் அரங்கேறி இருக்கின்றது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தமாக 42 லட்ச ரூபாயை சுருட்டிக் கொண்டு ஓடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிய வண்ணம் உள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த 59 வயதான சந்திரராஜ் என்பவர் தனது மகனுக்காக சிங்கப்பூர் செல்வதற்கு இணைய வழியில் வேலை தேடினார். அப்பொழுது போரூரைச் சேர்ந்த 31 வயதான பாலமுருகன் என்பவர் சிங்கப்பூரில் உள்ள பிரபலமான நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். ஆனால் அதற்கு நிறைய செலவாகும் என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறித்து மொத்தம் 42.40 லட்சம் ரூபாயினை சுரண்டியுள்ளார்.

நீண்ட நாட்களாகவே வேலை வாங்கி கொடுக்காமல் இருக்கவே சந்திரராஜ் அடிக்கடி அவருக்கு போன் செய்ததை அடுத்து அவர் போலியான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை ரெடி செய்து இவரிடம் கொடுத்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டார். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அவரைப் பற்றி போலீசார் விசாரித்ததில் இவர் ஏற்கனவே மோசடி வேலைகளில் ஈடுபட்டு கைதானவர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. எனவே அவரை தேடும்படியில் போலீசார் தற்பொழுது தீவிரமாக இடம்பெற்றுள்ளனர்.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் நமது நண்பர்கள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இந்தியாவில் உள்ள உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும். நம்பகமான ஏஜென்சிகளை பின்பற்றி நன்கு விசாரித்து விசா வந்தவுடன் பணம் கட்டுவதை சிறந்தது.

Related posts