TamilSaaga

StoryFest2021 தாத்தா பாட்டி காலத்து கதை… இதோ இண்டர்னெட் காலத்திலும் உங்கள் வீடு தேடி

குழந்தை பருவத்தில் இருந்தே நாமெல்லாம் கதை கேட்டே தான் வளர்ந்திருப்போம். ஒவ்வொரு வீட்டிலும் தாத்தாவும் பாட்டியும் கதை சொல்லாமலோ அதை கேட்காத குழந்தைகளோ இருக்க முடியாது. ஆனால் காலப்போக்கில் குழந்தைகள் வளர வளர கதைகள் கேட்பது குறைந்தது. இணையதள வளர்ச்சி காரணமாக கதை கேட்கும், சொல்லும் பழக்கம் வெகுவாக குறைந்தது.

தற்போது இந்த கதை கேட்கக்கூடிய சொல்லக்கூடிய திறனை ஊக்குவிக்கும் வகையில் The Storytelling Centre Limited, The Arts House ஆகிய நிறுவனங்கள் இணைந்து இணையத்தை பயன்படுத்தி StoryFest2021 எனும் நிகழ்ச்சியை நடத்திவருகிறார்கள்.

கடந்த ஜீன்.20 முதல் இந்த மாதம் 11 ஆம் தேதி வரை இணையத்தின் வாயிலாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

நவீன தொழில்நுட்பங்களில் வளர்ச்சியை கண்டுள்ள நமது சிங்கப்பூரின் வரலாறு, கலாச்சார மற்றும் பண்பாடு ஆகியவை கதைகள் மூலம் அடுத்த தலைமுறைக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும்.

கதை சொல்லும் கலையின் நிபுணர் காமினி இராமச்சந்திரன் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது தாத்தா பாட்டி சொன்ன கதைகள் அவரது கதை சொல்லும் ஆர்வத்தை தூண்டி அந்த திறனை வளர்த்துக்கொண்டு தற்போது கதை சொல்லும் நிபுணராக உயர்ந்துள்ளதாக கூறினார்.

கதை சொல்லும் கேட்கும் கலையை வளர்க்கும் போது நமது நாட்டின் கலாச்சார பாரம்பரியங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த கலையானது பேச்சு, மொழி பற்றிய புரிதல்களையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts