TamilSaaga

சிங்கப்பூரில் இந்திய ஊழியர்களுக்கு வேலை நேரம் எப்படி இருக்க வேண்டும்? இதற்கு சம்பளம் எப்படி கொடுப்பார்கள்? வாழ்க்கை ஒன்னும் அவ்வளவு ஈசி இல்ல பாஸ்!

சிங்கப்பூரில் வேலை செய்யும் போது பணி நேரம் எப்படி இருக்கும். எத்தனை நாட்கள் லீவ் கொடுப்பார்கள். இதுப்போன்ற சில சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சிங்கப்பூர் வேலை நேரம் மற்றும் விடுப்பு எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கை மனிதவளத்துறை கூறி இருக்கும் இந்த வேலை நேர வழிகாட்டுதல்கள் வேலைவாய்ப்புச் சட்டத்தின் பகுதி IV இன் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். முழு நேர, பார்ட் டைம் மற்றும் காண்ட்ராக்ட் பணிகளில் இருப்பவர்கள் இதில் வருவார்கள். மேலும் $2600 சிங்கப்பூர் டாலர் சம்பளம் வாங்குபவர்களும் இதனுள் அடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

முதலில் சிங்கப்பூரில் ஒரு வாரமாக கருதப்படுவது திங்கள்கிழமை துவங்கி ஞாயிறு வரை. ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை முடிக்கும் காலத்தினை Hours of work எனக் குறிப்பிடுவார்கள். இதனால் உங்களின் ஓய்வு, தேநீர் இடைவேளை மற்றும் உணவுக்கு அனுமதிக்கப்படும் எந்த இடைவெளிகளும் கணக்கில் கொள்ளப்படாது.

இதையும் படிங்க: டிப்ளமோ படித்துவிட்டு சிங்கப்பூர் வரப்போறீங்களா? உங்களுக்கு கண்டிப்பா தங்க கம்பளம் தான்… சம்பளம் கூட $3000 சிங்கப்பூர் டாலர் வரை இருக்குமா?

தொடர்ந்து, 6 மணி நேரம் ஊழியர்கள் ஓய்வினறி வேலை செய்யக்கூடாது. இருப்பினும், குறிப்பிட்ட வேலைக்கு தொடர்ச்சியாக 8 மணிநேரம் வரை வேலை செய்ய நேரிட்டால், உணவுக்கு உண்ண இடைவெளிகள் வழங்கப்பட வேண்டும். அதுவும் குறைந்தது 45 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

ஒரு காண்ட்ராக்ட் ஊழியருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். வேலைக்கான ஒப்பந்தத்தில் இது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். பொதுவான வேலைகளுக்கு ஒப்பந்த நேரம் என்பது இரண்டு வகையில் இருக்கும்.

வாரத்தில் 5 நாட்கள் அல்லது அதற்கு குறைவாக வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 44 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்தில் 5 நாட்களுக்கு மேல் வேலை செய்பவர்கள் 8 மணி நேரம் ஒரு நாளைக்கோ அல்லது வாரத்திற்கு 44 மணி நேரமோ வேலை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் OT உடன் உங்க சம்பளத்தை கணக்கு செய்வது எப்படி? இன்ச் பை இன்ச் உங்க முழு சம்பள விவரத்தை தெரிஞ்சுக்கோங்க! காசு ஒன்னும் சும்மா கிடைக்கல பாஸ்! மாடு மாதிரி தானே உழைக்குறோம்!

நீங்கள் ஒரு ஷிப்ட் பணியாளராக இல்லாவிட்டாலும், ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வரை வேலை செய்ய ஒப்புக்கொண்டால், தொடர்ந்து 3 வாரங்களில் சராசரியாக 44 மணிநேரத்திற்கு மிகாமல் வேலை செய்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது. OT வேலைக்கு, உங்கள் கம்பெனி உங்களுக்கு ஒரு மணிநேர அடிப்படை ஊதியத்தில் குறைந்தது 1.5 மடங்கு கொடுக்க வேண்டும்.

ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சில தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டும் இதில் தளர்வு கொடுப்பார்கள். ஒரு ஊழியர் ஒரு மாதத்தில் 72 மணி நேர OT மட்டுமே வேலை செய்ய முடியும். ஓய்வு நாள் அல்லது பொது விடுமுறை நாட்களில் வேலை செய்யும் போது 72 மணிநேர OT நேர வரம்பில் கணக்கிடப்படாது. ஊழியருக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாய விடுப்பு கொடுக்கப்பட வேண்டும். அதற்கு சம்பளம் தரப்படாது. இந்த நாளில் வேலை செய்தால் அதற்கு கூடுதல் சம்பளம் தரப்பட வேண்டும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts