TamilSaaga

“அடக்குமுறை கண்டும் அடங்காத போராளி” – 100வது பிறந்தநாளை கொண்டாடும் தோழர் சங்கரய்யா

பொதுவாக “வறுமையின் நிறம் சிவப்பு” என்று கூறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது. இந்நிலையில் வறுமையின் நிறம் சிவப்பு அல்ல மாறாக அந்த வறுமையை போக்கவந்த நிறம் தான் சிவப்பு என்று முழக்கமிட்டவர் தான் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா. இந்த மாபெரும் தலைவர் இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.

இந்தியாவை போல உலகின் பல நாடுகளும் அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வர பல போராட்டங்களை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகும் சாதி மத மொழி பேதத்தில் சிக்குண்டு கிடைத்தன மக்கள் மனதில் பலர் சமூக வேள்வியை சுடர்விட்டு எறியச்செய்தனர். அப்படி மக்கள் மன்னத்திலும் தனது மனதிலும் சமூக வேள்வியை சுடர்விட்டு எறியச் செய்தவர் தான் தோழர் என்.சங்கரய்யா.

என்.சங்கரய்யாவின் முதல் போராட்டமே இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உழைக்கும் வர்க்கத்தினர் மீது அளவுகடந்த பாசம் கொண்ட சங்கரய்யாவின் பேச்சில் எழுச்சி கண்ட இளைஞர்கள் பலர். பல ஆண்டு கால சிறைவாசம், சில ஆண்டு காலம் தலைமறைவான வாழ்க்கை என்று மக்களுக்காக இவர் செய்த தியாகங்கள் பல.

மக்களுக்கு நல்லது செய்தால் வரும் அத்தனை அடக்குமுறைகளையும் தாங்கிக்கொண்ட இந்த உத்தமர் தடியடிகள் பல பெற்றபோதும் தான் கொண்ட கொள்கையில் இருந்து சற்றும் மாறவில்லை. மிகச்சிறந்த இலக்கியவாதியாக திகழ்ந்த இவர் ஜனசக்தி, தீக்கதிர் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

மக்கள் போற்றிய இந்த மாபெரும் தலைவர் இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Related posts