TamilSaaga

“ரோம் நகரில் நடந்த G-20 மாநாடு” : இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் பிரதமர் லீ

இந்த வார இறுதியில் ரோமில் நடைபெறும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக, நமது பிரதமர் லீ சியென் லூங், ஜெர்மனி மற்றும் இந்திய நாட்டின் தலைவர்களை இன்று சனிக்கிழமை (அக்டோபர் 30) ​​தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். அவர் முதலில் ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மேர்க்கலைச் சந்தித்தார், அவருடைய தூதுக்குழுவில் துணைவேந்தரும் நிதியமைச்சருமான ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து நெதர்லாந்தின் ராணி மாக்சிமாவையும் பிரதமர் சந்தித்தார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலையும் சந்தித்து பேசினார். சனிக்கிழமையன்று உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் திரு லீயை இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை ஜி-20 சுகாதார மற்றும் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சிங்கப்பூரின் நிதியமைச்சர் திரு வோங், இந்தோனேசிய நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் பல்வேறு துறைகளில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இந்திய வர்த்தக அமைச்சரும் ஜி-20 ஷெர்பாவுமான பியூஷ் கோயலுடன் நல்ல சந்திப்பை மேற்கொண்டதாகவும் திரு வோங் கூறினார். அவர் புருனேயின் நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் II அமின் லியூ மற்றும் நெதர்லாந்தின் நிதி அமைச்சர் வோப்கே ஹோக்ஸ்ட்ரா ஆகியோரையும் இந்த மாநாட்டில் சந்தித்தார்.

Related posts