TamilSaaga

எதையும் கண்டுக்காமல் உழைச்ச என்னம்மா ராமர்… சினிமா பிரபலங்களையே வாய் பிளக்க வைத்த என்னம்மா ராமர் கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீடு

விஜய் டிவியின் பிரபல நகைச்சுவை கலைஞராக இருக்கும் ராமர் தான் இப்போ டாக் ஆஃப் தி டவுனாகி இருக்கிறார். என்னென்ன காரணமுனு விசாரிக்கும் போது அவர் கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீட்டிற்கு கிரஹபிரவேசத்தினை விஜய் டிவி பிரபலங்களை அழைத்து வெகு விமரிசையாக நடத்தியது தான் இந்த வைரல் பேச்சுக்களுக்கு காரணமாகி இருக்கிறது.

விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு நிறைய காமெடி கலைஞர்கள் கிடைத்தனர். சிலருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்தாலும் சினிமாவில் நடித்து கொண்டு தொடர்ந்து விஜய் டிவியில் இருப்பதை தான் விரும்புகின்றனர். அந்த லிஸ்ட்டில் முக்கிய இடம் ராமருக்கு உண்டு. பண்டிகை நாட்களில் விஜய் டிவியில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ராமருக்கு முக்கிய இடம் இருக்கும்.

எல்லா காமெடி கலைஞர்களுமே பெரும்பாலும் அடுத்தவர்களை தான் கலாய்ப்பார்கள். ஆனால் ராமரோ அவர்களிடம் கலாய் வாங்கியே ஹிட் அடித்தவர். ஆனால் இவரின் முதல் ஃபேமஸான நிகழ்வு என்றால் அது இது எது நிகழ்ச்சி தான். அதில் சொல்வதெல்லாம் உண்மையை ஸ்பூஃப் செய்து என்னம்மா இப்படி பண்றீங்களேமா டயலாக்கை வைரலாக்கியதற்கு முக்கிய காரணமே ராமர் தான். ராமருக்கு செம ஹிட் கொடுத்தது என்னவோ பெண் வேடம் தான். ஆனால் அவரின் குடும்பத்தாருக்கு அதில் விருப்பமில்லை என்பதால் அதை தற்போதெல்லாம் ராமர் போடுவதில்லை. ராமர் காமெடி நடிகர் தானே என்று பார்த்தால் ராமர் ஒரு அரசு அதிகாரியும் தானாம். இது சமீபத்தில் பலருக்கும் தெரிந்த சேதியானது.

தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த எம்.பி சு.வெங்கடேசன் ராமருடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில், கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடந்த ஆய்வின் போது சுக்காம்பட்டி கிராமத்தின் விஏஓவாக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் ராமரை சந்தித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதை பார்த்த அவர் ரசிகர்கள் ஓயாமல் காமெடி செய்யும் ராமர் ஒரு அரசு நிர்வாகியா என ஆச்சரியப்பட்டனர்.

தமிழ்நாட்டில் மதுரையில் தான் ராமரின் சொந்த ஊர் இருக்கிறதாம். இதனால் தன் சொந்த ஊர் மக்கள் மீது எப்போதுமே ராமருக்கு ஒரு தனி பாசம் இருக்குமாம். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருக்கிற நோயாளிகளை சந்தோஷப்படுத்த அவ்வப்போது இலவசமாக சில காமெடி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது.

சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்த ராமரை திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் ராமரின் கால்ஷீட் காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். விஜய் டிவியில் தொடர்ந்து 20 வருடமாக இருந்து வரும் ராமர் தற்போது சினிமாவிலும் தலைகாட்ட துவங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராமர் புது வீடு கட்டி இருக்கும் தகவல் இணையத்தில் வெளியானது. இந்த வீட்டின் கிரஹபிரவேச நிகழ்வுக்கு விஜய் டிவி பிரபலங்கள், ரோபோ ஷங்கர் வந்து வாழ்த்து சொன்ன படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தொடர்ச்சியாக ரசிகர்களும் ராமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts