சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியர்கள் ஏஜென்ட் கேட்ட பெரிய தொகையை கட்ட முடியாமல் டிகிரி படித்திருந்தால் கூட வொர்க் பெர்மிட் வேலைக்கு வந்து விடுவார்கள். ஆனால் அவர்களுக்கும் SPassல் மாற ஆசை இருக்கும் தானே. அப்படி ஒரு எண்ணத்தில் இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்க எல்லா குழப்பத்துக்கும் விடை கிடைக்கும்.
படித்திருந்தால் கூட நடக்கும் பித்தலாட்டங்களை மனதில் வைத்து ஏமாறாமல் செல்லும் ஒரு வழியை தேர்ந்தெடுப்பார்கள். அது தான் ஸ்கில் டெஸ்ட். வேலைக்கு வரும் ஊழியர்கள் வொர்க் பெர்மிட்டில் சம்பளம் கூட அடிப்படையாக தினம் $18 சிங்கப்பூர் டாலரில் தான் தரப்படும். இதில் முதல் சில வருடங்கள் கஷ்டப்பட்டால் சம்பள உயர்வு இருக்கும் தான். அதை போல, நீங்க வேலை பார்க்கும் துறைக்கு ஏற்ப கோர்ஸ்கள் படிக்கும் போது ப்ரோமோஷனுடனான சம்பள உயர்வும் கிடைக்கும்.
ஆனால் ஒரு சிலரோ வேறு படிப்பினை படித்து விட்டு வொர்க் பெர்மிட்டில் சிங்கப்பூரில் வேலைக்கு வந்திருப்பார்கள். அவர்கள் இங்கு வந்தபின்னர் படிப்புக்கேற்ற வேலையை தேடிக்கொள்ள முடியும். அதுவும் SPassல் கிடைக்கும் போது எப்படி எளிதாக மாற முடியும்.
வேலை கிடைத்தவுடன் முதலில் பழைய கம்பெனியில் வேலை மாற இருப்பதை பற்றி தெளிவாக கூறி Trans-Letterஐ வாங்க வேண்டும். சிலர் கொடுத்து விட்டாலும் சில நிறுவனங்கள் இதை உடனே ஒப்புக்கொண்டு செய்ய மாட்டார்கள். அப்படி இருக்கும் சூழ்நிலையில் MOMல் இதுபற்றி கூறுங்கள். அவர்கள் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் ஃபார்மினை கம்பெனியில் கொடுக்கும் போது அவர்களிடம் இருந்து உடனே ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உண்டு. அந்த லெட்டரை வாங்கியவுடன் புது கம்பெனி உங்களுக்கு MOMல் Spassக்கு அப்ளே செய்யலாம். இதற்கு 2ல் இருந்து 3 வாரங்கள் வரை எடுக்கும்.
ஆனால் இப்போ சில நிறுவனங்கள் வேலைக்கு வந்த ஊழியரின் விசா காலம் முடியும் வரை வெளியில் அனுப்பாமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதனால் இது உங்க கம்பெனியின் நிலையை பொருத்து மாறுப்படும். மேலும், நீங்கள் தங்க உங்கள் பழைய கம்பெனி கொடுத்த இருப்பிடத்தினை உடனே காலி செய்யக்கூடாது. அப்படி காலி செய்து விட்டால் சட்டவிரோதமாக கருதப்படும். உங்க பழைய கம்பெனி புகார் கொடுக்கும் பட்சத்தில் நீங்கள் கைது செய்து சிங்கப்பூரை விட்டு வெளியேற்றப்படலாம். இதனால் புதுக்கம்பெனியில் இருந்து விசா வரும் வரை அதே இடத்தில் தங்கி இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: லட்சத்தில் காசு கொடுக்க முடியாதா? கவலையை விடுங்க… Skilled Test இருக்கு… பாஸ் பண்ண என்ன செய்யணும் தெரியுமா… இத படிங்க முழுசா…
புது கம்பெனியில் அப்ளே செய்யப்பட்ட SPass அப்ரூவ் ஆகிவிட்டால் பழைய கம்பெனியின் Notice நாட்களும் முடிந்தவுடன் புது கம்பெனியில் சேர்ந்து விடலாம். அதைப்போல, நீங்க வெளியேறும் போது பழைய வொர்க் பெர்மிட் ரத்து செய்யப்பட்டதா என்பதை மீண்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். மேற்கூறியவை சாதாரண முறையில் நடக்கும் நடைமுறை தான். ஆனால் ஒரு சிலருக்கு இப்படி அப்ளே செய்யும் போது முதல் முறையில் ரிஜெக்ட் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஆகும் போது சரியான டாக்குமெண்ட்களை சமர்பித்து மீண்டும் அப்ளே செய்யுங்கள். இந்த நடைமுறையில் உங்களுக்கும் மேலும் ஏற்படும் சந்தேகத்தினை தீர்க்க சிங்கப்பூர் அதிகாரப்பூர்வ ஏஜென்சியை தொடர்பு கொள்ளுங்கள்.