TamilSaaga

வேலைக்கு செல்ல ப்ளைட் ஏறப்போறீங்களா? மிஸ் பண்ணவே கூடாத டாக்குமெண்ட் லிஸ்ட் என்னென்ன? தெரிஞ்சிக்கிட்டு ஒரு செக்கிங்க போடுங்க… நிம்மதியா ப்ளைட் ஏறுங்க! வெல்கம் டூ சிங்கப்பூர்!

சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து வேலைக்காக வரும் ஊழியர்களிடம் கேட்கப்படும் டாக்குமெண்ட்கள் தான் ரொம்பவே முக்கியமாக இருக்கும். இதை தெரிந்து கொண்டால் வேலைக்கான ப்ராசஸில் மிகப்பெரிய கிணற்றினை தாண்டி விடலாம். அதை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

S-Pass, E-Pass, Tourist visa, business visa, student visa, TWP, TEP ஆகிய எல்லா வகையான பாஸ்களுக்கும் ஒரே மாதிரியான டாக்குமெண்ட்கள் தான் கேட்கப்படும். முதலில் நீங்கள் வேலைக்கு வந்த விசாவை வைத்துக்கொள்ளுங்கள். கோவிட் தடுப்பூசி இரண்டும் போட்டதற்கான சான்றிதழ். இதில் நீங்க தடுப்பூசி போட்டு 1.5 வருடத்தினை கடந்து விட்டால் பூஸ்டர் போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதையும் சான்றிதழிலில் குறிப்பிட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் EPass… அப்ளே செய்ய என்னென்ன டாக்குமெண்ட்ஸ்… இதை தெரிஞ்சிக்கோங்க முத!

பயணம் செய்பவரின் பாஸ்போர்ட், டிக்கெட் மற்றும் SG arrival card. இதனை நீங்களே எடுக்க முடியும். அல்லது உங்களின் ஏஜென்ட் மூலமாக ICA வெப்சைட்டில் எடுக்கலாம். tourist visaவில் வந்து வேலை தேடும் ஐடியாவில் வராமல் இருப்பது நல்லது. 28 நாட்கள் விசாவில் வந்தால் கண்டிப்பாக நிறைய கேள்விகள் இருக்கும். இந்த விசாவில் வருபவர்கள் கல்வி சான்றிதழ்களை எடுத்து வரக்கூடாது. கையில் ரிட்டர்ன் டிக்கெட் இருப்பது நல்லது.

தடுப்பூசி சான்றிதழில் உங்க பெயருடன் தந்தை பெயர் இணைந்து இடம்பெற வேண்டும். பிறந்த தேதி மற்றும் பாஸ்போர்ட் எண் கட்டாயமாக சான்றிதழில் குறிப்பிட்டு இருக்க வேண்டியது கட்டாயம். மேலும், வேலைக்கு வர இருக்கும் general workers கொடுக்கப்படும் Work Permit, PCM permit, shipyard. இதற்கு எடுத்து வர வேண்டிய டாக்குமெண்ட்ஸ் விசா, சர்வதேச கோவிட் தடுப்பூசி போட்ட சான்றிதழ், on boarding ஸ்லாட் புக்கிங் செய்த தகவல், டிக்கெட், பாண்ட் பேப்பர், SG arrival card. இதில் ஒரு டாக்குமெண்ட்கள் இல்லாத பட்சத்தில் உங்களை அப்படியே திருப்பி இந்தியா அனுப்பி விடுவார்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு கிளம்பிட்டு இருக்கீங்களா?… புத்தாண்டில் இருந்து என்ன மாற்றம்?.. கையில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான Travel Documents என்னென்ன? இதை தெரிஞ்சிக்காம Flight ஏறாதீங்க!

முதல்முறையாக வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு on boardingல் மூன்று நாட்கள் தங்க வைத்திருப்பார்கள். இது புதியவர்களுக்கு மட்டுமே. ஸ்லாட் போடப்படும் நாளை வைத்து டிக்கெட்டினை புக் செய்து கொள்ளுங்கள். இந்த டாக்குமெண்ட்டுகளை முக்கியமாக பிரிண்ட் செய்து வைத்து கொள்ளவும். போனில் காட்டுவது போதுமானதாக இருக்காது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”

Related posts