TamilSaaga

சிங்கப்பூர் வேலைக்கு செல்ல செலவே இல்லாமல் Free Visa… இந்த வழில போனா ஏமாற மாட்டீங்க… வாழ்க்கையும் கியாரண்டி தான்! Tips & Tricks

சிங்கப்பூரில் சென்று வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் பலர் தினமும் வருவதை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் எல்லாருமே அவ்வளவு எளிதாக சிங்கப்பூர் வந்து விடுவதில்லை தான். ஏகப்பட்ட கடனை வாங்கி கஷ்டப்பட்டு வந்திருப்பார்கள். சிலர் ஒருமுறை ஏமாற்றம் அடைந்தும் வாழ்க்கைக்காக இங்கு வந்தவர்களும் கூட.

படித்தவர்களுக்கு 5 லட்சம் வரை செல்லும் ஏஜென்ட் கட்டணம், படிக்காமல் அனுபவ அறிவில் செல்ல நினைப்பவர்களுக்கு 3 லட்சம் வரை செல்கிறது. இந்த தொகையை அரும்பாடுப்பட்டு ரெடி செய்து சிங்கப்பூர் கிளம்புவதற்குள் பலருக்குள் பெரிய போராட்டமே நடக்கும். இதில் இன்னொரு க்ரூப்பும் இருப்பார்கள். சிங்கப்பூர் சென்று வேலை பார்க்க ஆசை இருக்கும். ஆனால் அத்தனை பெரிய லட்சத்தினை செலவு செய்ய முடியாமல் இருப்பார்கள். கடனை வாங்க வழி இல்லாமலோ, பிடிக்காமலோ அந்த ஆசையை தள்ளி வைத்து விடுவார்கள்.

இதையும் படிங்க: வேலைக்கு செல்ல ப்ளைட் ஏறப்போறீங்களா? மிஸ் பண்ணவே கூடாத டாக்குமெண்ட் லிஸ்ட் என்னென்ன? தெரிஞ்சிக்கிட்டு ஒரு செக்கிங்க போடுங்க… நிம்மதியா ப்ளைட் ஏறுங்க! வெல்கம் டூ சிங்கப்பூர்!

நீங்களும் இந்த குழப்பத்தில் இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதெப்படி ஃப்ரீ விசா வேலைக்கான இணையத்தளம் சொல்றீங்களா? அதெல்லாம் பொறுமையா தேட முடியாதுப்பானு சொல்றவங்களா? job portalலாம் சொல்லப்பா. இது வேற விஷயம். முழுசா படிங்க உங்களுக்கே நிறைய விடை கிடைக்கும்.

முதலில் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு நிறுவனம் தங்களுக்கு தேவைப்படும் ஆட்களை வேலைக்கு எடுக்க Manpower ஏஜென்சியை தான் நாடுவார்கள். அவர்களிடம் சொல்லி அவர்கள் மூலமாக குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் client interviewக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு தான் Free visa கிடைக்கும். எந்த சிங்கப்பூர் நிறுவனமும் நேரடியாக இந்தியாவிற்குள் வந்து இண்டர்வியூ நடத்த மாட்டார்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் தான் வேலை கிடைச்சிருக்கா… சம்பளமும் கம்மியா? மாதம் $3000 வெள்ளி தரும் SPass… எப்படி மாறலாம்? இத Follow பண்ணுங்க

இந்த ஏஜென்சி மூலமாகவே நடத்துவார்கள். இதை தான் client meeting எனக் கூறுகிறார்கள். பெரும்பாலும் இந்த முறையில் தேர்வாகும் நபர்களுக்கு எந்தவித கட்டணமும் கேட்கப்பட மாட்டாது. முழுக்கவே ப்ரீ விசாவில் தான் அழைத்து செல்வார்கள். ஒரு சில நிறுவனம் மட்டும் விமான டிக்கெட்டினை ஊழியரிடம் கேட்பார்கள். சில சிங்கப்பூர் நிறுவனம் ஒரு ஊழியருக்கு கட்டணம் நிர்ணயம் செய்து ஏஜென்ட்டிற்கு கொடுத்துவிடுவதும் நடைமுறையில் இருக்கிறது.

இந்த வகையான இண்டர்வியூக்கள் எங்கு நடக்கும்? மெயின் சிட்டிகள் நடக்கும். அதை தெரிந்து கொள்ள செய்தித்தாளினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். சில ஏஜென்சிக்கள் தங்கள் இணையத்தளங்களிலும் விளம்பரம் கொடுப்பார்கள்.

இந்த மீட்டிங்கிற்கு எந்த ஏஜென்ட்டினையுமே நீங்கள் தேட வேண்டாம். செய்தித்தாளை தொடர்ந்து படித்தாலே தெரிந்து கொள்ளலாம். இதனால் கிட்டத்தட்ட சில லட்சங்களை சேவ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts