TamilSaaga

Chennai Airport-ன் முக்கிய அப்டேட்.. விரைவில் அமலாகும் புதிய வசதி.. பயணிகள் ஹேப்பி!

சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், Baggage-களை பதிவுசெய்யும் நடைமுறை இன்னும் ஒருசில மாதங்களில் எளிய முறைக்கு அப்டேட் ஆகவிருக்கிறது.

அங்கு ஏர்போர்ட்டில் கட்டுப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த முனையம் (New Integrated Terminal) இன்னும் ஐந்தாறு மாதங்களில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முனையத்தில் Baggage-களை தாமாகவே பதிவுசெய்யும் கூடங்களும் பயணத்தைச் சொந்தமாக பதிவுசெய்யும் (check-in) முகப்புகளும் அமைக்கப்படுகிறது.

ஏற்கனவே சென்னை விமான நிலைய முனையங்களில் Airport’s Self-Service Check-In செயல்பாட்டில் தான் உள்ளது. இருப்பினும், இந்த புதிய முனையத்தில் Baggage-ஐ தாமாகவே பதிவுசெய்யும் வசதி பயணிகளிடையே நல்ல ரெஸ்பான்ஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க – சுதந்திர வாழ்க்கை எப்போது? விலங்குகளா நாங்கள்? – சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேதனை.. ஏன்?

தற்போது, Baggage-களை பதிவு செய்ய Passengers நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், புதிய முனையத்தில் Baggage-ஐ சொந்தமாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டவுடன், இந்த நடைமுறையை விரைவில் முடித்துவிட்டு Immigration, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த பணிகளை பயணிகள் பார்க்க முடியும். வேலை அனைத்தும் விரைவில் முடிந்துவிடும். இதனால், விமான நிலையத்தில் நெரிசலும் குறையும் என சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முனையம் ரூபாய். 2,000 கோடி செலவில் கடந்த ஓராண்டாக கட்டுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts