TamilSaaga

சிங்கப்பூரில் ஒருநாளைக்கு $22 வெள்ளி சம்பளம் தரும் இந்த கோர்ஸ்… OTயும் இருக்கா… நீங்க கூட படிக்கலாம்… வாழ்க்கை ஸ்பெஷலா இருக்குமாம்!

சிங்கப்பூரில் பொருளாதாரத்தினை மாற்ற வேண்டி அனைவரும் வேலைக்கு முயற்சித்து கொண்டே இருக்கின்றனர். சிலருக்கு சரியான வேலை கிடைத்து வாழ்க்கை ஒருவாறு செட்டில் ஆனால் கூட பலருக்கு அது எட்டாக்கனியாகவே இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பிரச்னையை தீர்க்க வழி சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கும் ஆளா நீங்க அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

சிங்கப்பூரில் ஏகப்பட்ட கோர்ஸ்கள் இருக்கிறது. சின்ன வேலைக்கு சொற்ப சம்பளத்துக்கு வந்துவிட்டு அப்படியே இருந்தால் எதுவுமே மாறாது. இப்படி கோர்ஸ்களை இடைப்பட்ட காலத்தில் படித்தால் தான் தொடர்ந்து சம்பள உயர்வுடன் நல்ல வேலைக்கு மாற முடியும். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அப்படி ஒரு பெத்த தொகையை சம்பளமாக கொடுக்கும் வேலை தான் riggle & signalman.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல இருக்கீங்களா? வாழ்க்கை செலவுகள் எப்படி இருக்கும்? எதுக்கு காஸ்ட்லியா இருக்கும்… தெரிஞ்சிக்கிட்டு ப்ளைட் ஏறுங்க செலவுகள் மிச்சம் தான்!

இதற்கு ஆங்கிலம் பெரிதாக தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. டிகிரியும் தேவை இல்லை. அடிப்படை அறிவே போதுமானது. அதுப்போல இதற்கு கட்டணமும் குறைவாகவே கேட்கப்படும். இதன் கட்டணமும் ரொம்பவே குறைவு என்று கூறப்படுகிறது.

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம். riggle & signalman கோர்ஸ் எப்படி படிக்கலாம். சம்பளம் எப்படி இருக்கும். இந்த வேலையில் இருக்கும் பிரச்னைகள் என்ன இதை தெரிந்துக்கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

riggle & signalman என்றால் சிங்கப்பூரில் கட்டட பணிகளில் அல்லது வேறு இடங்களில் இருக்கும் க்ரேன் ஆபரேட்டர்களுக்கு சிக்னல் கொடுப்பவர்கள் தான். இவர்கள் கை ஆக்‌ஷன் மூலமாகவோ வாக்கி டாக்கி மூலமாகவோ சிக்னல் கொடுப்பார்கள். இதை வைத்து தான் க்ரேன் ஆபரேட்டர்கள் இயங்க வேண்டும்.

இதையும் படிங்க: வெளிநாடு வேலைக்கு பெயர் போன சிங்கப்பூர்… இந்திய ஊழியர்களை சரியாக அடைகாக்கிறதா? காவு கொடுக்கிறதா? ஆய்வு சொல்வது என்ன?

இவர்கள் சிக்னல் மிஸ்ஸாகும் பட்சத்தில் விபத்து கூட வாய்ப்புகள் நடக்கும். இதனால் தான் இதற்கு கூட கோர்ஸ் இருக்கிறது. இந்த கோர்ஸினை படிக்க உங்களுக்கு எந்தவித கல்வி தகுதியும் பெரிதாக கேட்கப்படாது. அடிப்படை பள்ளி படிப்பு இருந்தாலே இந்த கோர்ஸில் அட்மிஷன் போடலாம்.

இந்த கோர்ஸினை படிக்க அதிகபட்சமாகவே 300 சிங்கப்பூர் டாலர் மட்டுமே கட்டணமாக கேட்கப்படும். நீங்கள் தங்கி இருக்கும் இடத்தினை சுற்றி இருக்கும் இன்ஸ்டியூட்களில் உங்களுக்கு வசதியாக இருக்கும் இடங்களில் இந்த கோர்ஸினை அட்மிஷன் போட்டு முடித்து கொள்ளலாம். இந்த கோர்ஸின் காலம் 2 நாட்கள் மட்டுமே. கம்பெனியின் ஒப்புதலுடன் செல்லும் போது 2 நாட்கள் வார நாளிலேயே சென்று விடலாம்.

நீங்களாக செல்லும் போது 2 ஞாயிறுகளில் முடிக்கலாம். தியரி தேர்வில் சாய்ஸ் டிக் செய்வது போல தான் இருக்கும். அதனால் எளிதாக முடித்து விடலாம். பிராக்டிக்கல் தேர்வில் க்ரேன் ஆபரேட்டர்களுக்கு சிக்னல் கொடுக்க சொல்லுவார்கள். அதை சரியாக முடித்தால் உங்களுக்கு சான்றிதழ் கிடைத்துவிடும்.

இதை வைத்து நீங்கள் வேலை செய்யும் கம்பெனியிலோ அல்லது புது கம்பெனிக்கோ riggle & signalmanஆக மாறிக்கொள்ளலாம். நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். ஒருநாளைக்கு 22 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் கிடைக்கும். இருந்தும் இந்த வேலையில் முக்கியமே அதிக கவனத்துடன் செயல்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts