TamilSaaga

“என் மாப்பிள்ளையை காணும்” : சிங்கப்பூர் பெண்ணுக்கு இருமுறை நின்று போன கல்யாணம் – அவ்வளவு துரதிர்ஷ்டசாலியா?

“இன்று எங்களுக்கு திருமணம், ஆனால் இங்கே வரவேண்டிய மாப்பிள்ளை எங்கே?” என்று சிங்கப்பூர் பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 20ம் தேதி வெளியிட்ட நகைச்சுவையான TikTok வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருமண நாளுக்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கும் மாப்பிள்ளையாக ஆகவிற்கும் அவருக்கும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டதை அவர் பின்னர் ஒரு காணொளியில் வெளிப்படுத்தினார். தற்போது அவர்களது திருமணம் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு – ஒரேடியாக டிச.31, 2022 வரை பயண நேரத்தை மாற்றிய INDIGO – Exclusive Report

பிப்ரவரி 14ம் தேதி, அந்த தம்பதியினர் பிப்ரவரி 20ம் தேதி நடக்கவிருக்கும் தங்கள் திருமணத்திற்குத் தயாராகும் வகையில் திருமணப் பதிவேட்டில் (ROM) திருமணச் சான்றிதழைப் பெறச் சென்றதாக அந்த பெண் ஒரு பதிவில் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு தனது வருங்கால கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக அவர் தனது வீடியோவில் கூறியுள்ளார்.

அவர் ஒரு ART சோதனையை மேற்கொண்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக பெருந்தொற்றுக்கு நேர்மறையான முடிவுகள் வெளிவந்தன. அவருடைய நேர்மறையான முடிவைப் பற்றித் தெரிவிக்க திருமண ஒருங்கிணைப்பாளரை அவர்கள் அழைத்தனர், ஆனால் திருமண நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் திருமண தேதிக்குள் மணமகன் ஐந்து நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்திருப்பார், மேலும் உடல்நிலையும் நன்றாக தேறிவிடும் என்பதால், தேதியில் மாற்றம் செய்யவேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

அப்போது தான் அடுத்த சோகசெய்தியாக அந்த பெண்ணுக்கும் பெருத்தொற்று உறுதியானது. இறுதியில் வேறு வழியின்றி கூடுதல் கட்டணத்தை செலுத்தி திருமண தேதியை தள்ளிப்போட அவர்கள் முடிவெடுத்தனர். மணமகளும் தொற்று பாதித்த நிலையில் தம்பதியினர் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து தங்கள் திருமணத்தை ஒத்திவைத்ததைப் பற்றி தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்கள் திருமண ஸ்டுடியோ, ஒப்பனை கலைஞர், கவுன் மற்றும் சூட் விற்பனையாளர்கள், மற்றும் திருமண நிறுவனம் ஆகியோருக்கும் திடீர் மாற்றங்கள் குறித்து தெரிவிக்க வேண்டியிருந்தது

மேலும் படிக்க – நாங்களே கஷ்டத்துல இருக்கோம்; இதுல வெளிநாட்டு ஊழியர்களுக்கு எப்படி அதிக Basic Pay கொடுக்க முடியும்? – சிங்கப்பூரில் முதலாளிகள் “ஆவேசம்”

ஆனால் “எல்லோரும் எங்கள் நிலையை எளிதில் புரிந்துகொண்டு செயல்பட்டதற்கு நன்றி” என்று மணமகள் ஒரு பதிவில் கூறியிருந்தார். நிச்சயம் வெகு விரைவில் எங்கள் திருமணம் எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts