TamilSaaga

‘ஏதோ தவறாக நடக்கிறது!’.. மிகவேகமாக விரிவடையும் பிரபஞ்சம்.. குழப்பத்தில் நாசா விஞ்ஞானிகள்

Big Bang என்ற வார்த்தையை நீங்கள் அவ்வப்போது கேட்டிருக்கலாம். அதாவது பெருவெடிப்பு என்று தமிழில் கூறுவார்கள். 14 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெடிப்பு (Big Bang) காரணமாகத் தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் இன்றும் நம்புகின்றனர். அப்படித்தான் உருவானதாக பாடமும் நடத்தி வருகிறார்கள்.

இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா? பெருவெடிப்பு ஏற்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது. இன்னும் அது பெரிதாகிக்கொண்டே இருக்கிறது!

அது என்ன பிரபஞ்சம் விரிவடைதல்?

இந்த அண்டத்தில் எந்தத் திசையில் பார்த்தாலும், அங்கிருக்கும் விண்மீன்கள் காலம் செல்ல செல்ல வேகமாக விலகிச் செல்கிறது. இதுவே பிரபஞ்ச விரிவடைதல் (expansion of the Universe) எனப்படுகிறது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமெனில், ஒரு நல்ல பழத்துண்டுகள் கொண்ட கேக் ஒன்றை micro oven வேகவைப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். நேரம் செல்ல செல்ல நன்றாக வெந்த கேக் விரிவடைந்திருக்கும். இப்போது முன்னர் இருந்ததை விட எல்லாப் பழத்துண்டுகளும் சற்றே விலகிச் சென்றிருக்கும். இதுதான் expansion of the Universe.

இந்த பிரபஞ்சம் விரிவடைவதை பல்வேறு வழிகளில் நாம் கணக்கிடலாம். அதில் ஒரு முறை பிரபஞ்சம் உருவாகிய பின்னரான பின்ஒளிர்வை (afterglow) அளப்பது மூலம் கண்டறிவது. அதாவது, வாண வேடிக்கைகள் முடிவடைந்ததும் அதிலிருந்து வரும் புகை பரவுவதைப் போல, பிரபஞ்ச பெருவெடிப்பின் பின்னர் அதன் பின்ஒளிர்வு இன்றும் பிரபஞ்சத்தில் எஞ்சி இருக்கிறது.

இந்த நிலையில் தான், dark energy விளைவுகள் காரணமாக சமீப காலமாக பிரபஞ்சத்தின் விரிவாக்கம் மீண்டும் வேகமடையத் தொடங்கியது என்று நாசாவின் Goddard விண்வெளி விமான மையம் தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதில் Hubble டெலஸ்கோப் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து இந்த ஹப்பிள் டெலஸ்கோப்பில் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறது. நமது அண்டம் குறித்த பல மர்மங்களைப் புரிந்துகொள்ளவும் தீர்க்கவும் இந்த டெலஸ்கோப் தான் உதவியுள்ளது. விண்வெளியைச் சுற்றி வரும் இந்த டெலஸ்கோப் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சுமார் 1.3 பில்லியனுக்கும் அதிகமான சுவாரஸ்யமான நிகழ்வுகளின் புகைப்படங்களை எடுத்துள்ளது.

1990 இல் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட்டபோது, பிரபஞ்சத்தின் விரிவாக்க விகிதம் மிகவும் நிச்சயமற்றதாக இருந்தது, அதன் வயது 8 பில்லியன் ஆண்டுகள் அல்லது 20 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே இருந்தது. ஹப்பிள் தொலைநோக்கியின் அசாதாரண கண்காணிப்பு ஆற்றலைப் பயன்படுத்தி 30 வருட உன்னிப்பான பணிக்குப் பிறகு, பிரபஞ்சம் 10 பில்லியன் ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான் நமது பிரபஞ்சத்தில் ஏதோ அசாதாரணமான நிகழ்வு நடப்பதாக நாசா கூறுகிறது. நமது பிரபஞ்ச விரிவாக்கத்தில் ஏதோ முரண்பாடு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நம்மைச் சுற்றி இருக்கும் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் வித்தியாசமாக இருப்பதாகவும், பிரபஞ்சத்தில் விசித்திரமாக ஏதோ ஒன்று நடப்பதாகவும் நாசா கூறுகிறது. இதனால் என்னவிதமான விளைவுகள் ஏற்படும்? பாதிப்புகள் இருக்குமா? போன்ற எந்த கேள்விகளுக்கும் விஞ்ஞானிகளால் பதில் அளிக்க முடியவில்லை. அதேசமயம், தொடர்ந்து இந்த மர்ம நிகழ்வுக்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Related posts