சிங்கையில் வேலைக்கு செல்லும் ஆசையில் யாரோ ஒரு ஏஜென்ட்டினை சந்தித்து பாஸ்போர்ட்டினை கொடுத்து விட்டால் போதும் வேலை கிடைத்து விடும் என பலரும் நினைக்கிறார்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்லும் போதும் ஏஜென்ட் எவ்வளவு முக்கியமானவர் என்பதை அடிக்கடி பலரும் கூறி இருப்பார்கள். இதை தான் தற்போதைய ஒரு சம்பவமும் நிரூபித்து இருக்கிறது.
J&Y Recruit என்ற வேலைவாய்ப்பு ஏஜென்சியை சிங்கப்பூரில் நடத்தி வருபவர் Chiang Zhi Wei. இவர் கம்பெனிகளுக்கு தேவையான ஊழியர்களை தொடர்ந்து தேடி கொடுத்து வந்திருக்கிறார். இதில் 2019 ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலைக்குள் 192 ஊழியர்களுக்கு 6 கம்பெனிகளின் பிரதிநிதியாக வொர்க் பெர்மிட் அப்ளே செய்து இருக்கிறார். அவர்களை வேலையில் எடுக்கும் நோக்கமெல்லாம் இல்லையாம். ஏனெனில் இது அந்தந்த நிறுவனங்களுக்கே தெரியாமல் நடந்து இருக்கிறது. பிற ஏஜென்சிகளிடம் அவர்கள் செல்லாமல் இருக்க இதை செய்திருக்கிறார்.
இதில் பெரிய பிரச்னையே இந்த அப்ளிகேஷன்களை MOM அப்ரூவ் செய்துவிட்டு, IPAம் வழங்கி இருக்கிறது. அந்த வெளிநாட்டு ஊழியர்களிடன் ஏஜென்ட்டின் மூலம் ஒவ்வொருவரிடம் இருந்து $50 சிங்கப்பூர் டாலரை வாங்கி இருக்கிறார். இதன் மூலம் மட்டுமே அவருக்கு $2000 சிங்கப்பூர் டாலர் கிடைத்து இருக்கிறது.
ஆனால் இந்த 192 பேரில் ஒருவரால் கூட சிங்கப்பூர் வர முடியவில்லை. ஏனெனில் அவர்களின் விண்ணப்பம் கம்பெனியால் ரிஜெக்ட் அல்லது கேன்சல் செய்யப்பட்டு விட்டது. சிலருக்கு MOMயே கண்டறிந்து வழங்கிய IPAவை ரத்து செய்து விட்டது.
இதனை தொடர்ந்து, வெளிச்சத்துக்கு வந்த இந்நிகழ்வால் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் (EFMA) கீழ் அவருக்கு 11 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தண்டனையைத் தொடர்ந்து, சியாங் நிரந்தரமாக வேலைவாய்ப்பு ஏஜென்சி நடத்த தடை செய்யப்பட்டுள்ளார். J&Y Recruit ஏஜென்சியின் லைசன்ஸும் கேன்சல் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அனைத்து வேலைவாய்ப்பு ஏஜென்ட்டுகளும், கம்பெனி நிர்வாகமும் வொர்க் பெர்மிட்டினை விண்ணப்பிக்கும் போது தவறான தகவலை வெளியிட கூடாது. அப்படி தவறுபட்சத்தில் EFMA இன் கீழ் குற்றமாக கருதப்படும். மேலும், அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு குற்றவாளிக்கு $20,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.