பெண்களுக்கு குறிப்பிட்ட வயது வந்ததும் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் வயதை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று இயற்கையை மீறி செயற்கையாகவே முகத்தில் சிகிச்சை எடுக்கும் போது தான் அனைத்து விளைவுகளும் ஏற்படுகின்றன. தோல் சிகிச்சை மருத்துவமனைகளும் பெண்களின் ஆசைகளை பயன்படுத்திக் கொண்டு இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க அவர்களின் ஆசையை தூண்டி விடுகின்றனர்.
இதே சம்பவம் தான் சிங்கப்பூரில் உள்ள ஒரு பெண்ணுக்கும் நிகழ்ந்திருக்கின்றது. கண்ணுக்கு கீழே சுருக்கங்கள் அதிகமானதால் அதை குறைப்பதற்காக சிகிச்சை மேற்கொண்ட பெண்ணிற்கு கண்பார்வை பரிபோன பரிதாப சம்பவம் நடந்திருக்கின்றது. கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் தோல் சிகிச்சை மருத்துவமனையில் சுருக்கங்களை நீக்குவதற்காக சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இந்த சிகிச்சை நடந்து முடிந்ததும் அந்த பெண்ணிற்கு பார்வை பறிபோய் உள்ளது. ஏற்கனவே இதே போன்ற சம்பவம் தைவான் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டில் நடந்திருக்கின்றது என்றாலும் சிங்கப்பூரில் பெண் பார்வை இழந்திருக்கிறது இதுவே முதல்முறை என்று கருதப்படுகின்றது. இதேபோன்று ஆஸ்திரேலியா நாட்டில் 2018 ஆம் ஆண்டு சிகிச்சை மேற்கொண்ட கிட்டத்தட்ட 100 பேர் பார்வை இழந்து உள்ளனர். எனவே அழகுக்காக சிகிச்சை எடுக்கும் பெண்களே உங்கள் உடல் நலமும் முக்கியம் என்பதில் கவனம் கொள்ளுங்கள்.