இந்தியாவைச் சேர்ந்த 14 வயதான ஜான்ஹவி பன்வார் எனப்படும் பெண் ‘ இந்தியாவின் அதிசய பெண்’ என்ற பட்டத்தை பெற்றுள்ளார். 14 வயதான ஜான்ஹவி எட்டாம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில் தற்பொழுது டெல்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பு படித்து வருகின்றார். குறைந்த வயதில் மிதமிஞ்சிய அவரது அறிவு வளர்ச்சியை இதற்கு காரணமாகும். இந்த உயரத்திற்கு அவரது பெற்றோரும் முக்கியமாக காரணமாக இருந்து சிறு வயது முதலே அவரை ஊக்கப்படுத்தியுள்ளனர்.
தற்போது இவர் எட்டு வெளிநாட்டு மொழிகளை நல்ல உச்சரிப்புடன் பேசுவதில் தேர்ச்சி பெற்று விளங்குகின்றார். இதில் பிரெஞ்சு, ஜப்பானிய மொழி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் ஹரியானாவி ஆகிய மொழிகள் அடங்கும். இவரது பெற்றோர்கள் கிராமப்புறத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் தனது மகளை ஆங்கிலம் உள்ளிட்ட பலமொழிகளில் சிறந்த திறமை உள்ளவராக ஆக்க வேண்டும் என்று சிறு வயது முதலே முடிவு செய்தனர்.இவர் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதே இவர்கள் தந்தை BBC தொலைக்காட்சியின் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொடுத்து ஆங்கில மொழியை நல்ல உச்சரிப்புடன் கற்க வைத்துள்ளார்.
மேலும் பல்வேறு மொழிகளை கற்பதற்காக ஆன்லைன் வகுப்பு மூலம் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றனர். எனவே 11 வயதிலேயே 8 மொழிகளை நன்கு உச்சரிப்புடன் கற்று தேர்ந்துள்ளார். சிறுவயதிலிருந்தே பிபிசி சேனலில் செய்தி தொகுப்பாளராக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்த இந்த பெண் தற்போது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கின்றார். 14 வயதிலேயே ஊக்கமளிக்கும் பேச்சாளராக விளங்கும் இவர் கல்வி நிறுவனங்களுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பேச்சுக்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.