சிங்கப்பூரில் நேற்று ஏப்ரல் 10ம் தேதி மதியம் சுமார் 1:08 மணியளவில் Yishun 7 பகுதியை நோக்கிய சாலையில் உள்ள Gambas Ave என்ற இடத்தில் ஒரு வேனும் இரண்டு மின்சார இருசக்கர வாகனங்களும் மோதிய பயங்கர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு “ட்ரிவியா” வேன் தீடீரென Lane Change செய்ததில், அதில் மோதாமல் இருக்க தனது இருசக்கர வாகனத்தை வேறு பாதையில் திருப்ப முயன்றபோது அருகில் வந்த வேறொரு பைக்கில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது என்று சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் கூறியுள்ளன.
அந்த வேண் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இறந்தவரின் உறவினர்கள் அவரை உடலை கண்டு கதறி அழுதது பெரு சோகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இறந்தவரின் சகோதரர் அங்கு வந்து கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு இருசக்கர ஓட்டுநர் ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இறந்தவர் ஒரு Food Delivery boy என்றும் அவருடைய மனைவி தற்போது மூன்று மாத கர்பிணி என்று அவரது சகோதர கண்ணீர் மல்க கூறியுள்ளார். தனது தவறினால் ஒரு உயிரை பலி வாங்கிய அந்த 34 வயது ஓட்டுநர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.