இத்தாலிக்கு VTL மூலம் சுற்றுலா பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரின் உள்ளூர் சுற்றுலாக் குழு, அவர்கள் சென்ற பேருந்தில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். குறைந்தது மூன்று குடும்பங்களுக்கு இதனால் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஷின் மின் டெய்லி நியூஸ் என்ற சீன நாளிதழின்படி, சுற்றுலாக் குழுவைச் சேர்ந்த ஒரு தாய்-மகள் இருவரும் சுமார் S$15,000 மதிப்புள்ள புதிய Designer பைகள், காலணிகள் மற்றும் ஆடைகளை இந்த சம்பவத்தின் விளைவாக இழந்தனர் என்று கூறியுள்ளது.
இதையும் படியுங்கள் : பலமாக தாக்கிக்கொண்ட இரு “தமிழக தொழிலாளர்கள்
இயோ (50) என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த தாய், ஷின் மின் டெய்லி நியூஸிடம், கடந்த டிசம்பர் 18ம் தேதி, இத்தாலியின் நேபிள்ஸில் இருந்தபோது, இந்தத் திருட்டு நடந்ததாகக் கூறினார். தங்களுடைய சாமான்கள் அனைத்தும் பேருந்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஹோட்டலுக்கு வந்த பிறகுதான் அது திருடப்பட்டதைக் கண்டுபிடித்ததாகவும் அவர் ஊடகத்திடம் தெரிவித்தார். மொத்தம் எட்டு சாமான்கள் எடுக்கப்பட்டன அதில் மூன்று இயோ மற்றும் அவரது மகளிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மற்றொரு குடும்பத்திலிருந்தும், மற்றும் இரண்டு மற்றொரு நபரிடமிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் சரக்கு பெட்டியும் சேதமடைந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கூற்றுப்படி, யோவின் மகள் (19), குழு இரவு உணவு சாப்பிடும் போது திருட்டு நடந்திருக்கலாம் என்று கூறினார். ஷின் மின் டெய்லிக்கு இயோ மேலும் அளித்த தகவலில் “மிக மோசமான விஷயம் என்னவென்றால், எங்கள் ஆடைகளும் திருடப்பட்டன, அதனால் இரவிலும் மறுநாளிலும், நாங்கள் அதே ஆடைகளை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் மகளின் சன்கிளாஸ்கள், எனது டிசிஎம் மருந்து மற்றும் எனது புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளும் திருடப்பட்டுள்ளன என்றார்.
சம்பவத்தன்று, அவர்களின் சுற்றுலா வழிகாட்டியின் உதவியுடன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஷின் மினிடம் பேசிய EU Holidays இன் இயக்குனர் Wong Yew Hoong, டூர் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பயணக் காப்பீட்டுக் கொள்கைகளில் இருந்து க்ளைம் செய்வதில் உதவி செய்யும் என்றும், பேருந்து நடத்துனர் நஷ்டத்தில் ஒரு பகுதியை ஏற்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். வோங்கின் கூற்றுப்படி, டிசம்பர் 18 அன்று நடந்த திருட்டு, அந்த நிறுவனம் இத்தாலிக்கு ஏற்பாடு செய்த 40 VTL பயணங்களில் முதல் முறை நடந்துள்ளது என்றார்.