TamilSaaga

“சிங்கப்பூரில் பெருந்தொற்று பாதுகாப்பு விதி மீறல்” – 7 உணவு மற்றும் பாண நிலையங்களுக்கு தற்காலிக சீல்

சிங்கப்பூரில் பெருந்தொற்று தடுப்பு பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வேறுபடுத்தப்பட்ட நடவடிக்கைகளை மீறியதற்காக ஏழு உணவு மற்றும் பான விற்பனை நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) நேற்று புதன்கிழமை (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையேயான தொடர்பைக் குறைக்கத் தவறியது, அத்துடன் வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நிலையை அவர்கள் நுழைவதற்கு முன்பு சரிபார்க்க ஒரு அமைப்பை வைக்காதது ஆகியவை குற்றங்களில் அடங்கும் என்று MSE தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : வெளிநாட்டு தொழிலாளருடன் தனிமையில் இருந்த வீட்டு பணியாளர்

மூட உத்தரவிடப்பட்ட விற்பனை நிலையங்களில், இரண்டு நிறுவனங்களான HARU மற்றும் Euphoria இரண்டாவது முறையாக மீண்டும் இந்த குற்றங்களை செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில், எட்டு பேருக்கு மேல் கூடும் கூட்டங்களை அனுமதித்த பிறகு HARU-வை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்டில், அமலாக்க அதிகாரிகளின் நுழைவை தாமதப்படுத்தி, அதன் வளாகத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை என்று தவறான தகவலை வழங்கிய பின்னர், 30 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

அதேபோல மீண்டும் குற்றம் செய்த யூஃபோரியா, இது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான தொடர்புகளைக் குறைக்கத் தவறியது. மேலும் “பணிப்பெண்களை பணியமர்த்தியது” என்று MSE தெரிவித்துள்ளது. மீதமுள்ள ஐந்து நிறுவனங்களை 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது, 237 ஜூ சியாட் சாலையில் உள்ள PUB 98 இதில் அடங்கும், இது அமலாக்க அதிகாரிகளை அதன் வளாகத்திற்குள் நுழைவதைத் தாமதப்படுத்தியது மற்றும் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு குழுக்களிடையே ஒன்றிணைக்க அனுமதித்தது ஆகிய குற்றங்கள் அடங்கும்.

தடுப்பூசி வேறுபாட்டின் நடவடிக்கைகள் உட்பட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுடன் கண்டிப்பாக இணங்குவது “அனைவரின் பாதுகாப்பிற்கும் முக்கியமானது” என்று அமைச்சகம் மேலும் கூறியது, குறிப்பாக Omicron மாறுபாட்டின் உலகளாவிய ஆபத்துக்கு மத்தியில் இதில் யாரும் சமரசம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts