TamilSaaga

சிங்கப்பூரில் BARக்கு போக குறுக்கு வழி தேடிய இளைஞர் – 4 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு

சிங்கப்பூரில் பார்கள் மற்றும் கிளப்களில் தனது நண்பர்களுடன் இணைந்து செல்ல, இளைஞன் ஒருவன் தனது வயதை அதிகப்படுத்திக்காட்ட அடையாள அட்டையை மாற்றி முறைகேடு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞன் பல இரவுகளில் இதுபோன்ற வேளைகளில் ஈடுபட்டு வந்தது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேசிய பதிவு அடையாள அட்டை எனப்படும் NRIC, போலியான அடையாள அட்டை பயன்படுத்துதல் மற்றும் தன்னுடன் கத்தி வைத்திருத்தல் உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது இன்று (ஜூலை 27) சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த இளைஞன் மீது உள்ள 4 குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நபர் ஒரு சிறியவர் என்பதால் அவருடைய பெயர் வெளியப்படவில்லை.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டபோது அந்த இளைஞனுக்கு 15 அல்லது 16 வயது இருந்ததாகவும், விருந்து சேவை நிறுவனத்தில் அந்த இளைஞன் பணிபுரிந்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 2019ம் ஆண்டில், அவர் தனது NRIC நகலெடுத்து, தனது பிறந்த ஆண்டு மற்றும் என்.ஆர்.ஐ.சி எண்ணில் மாற்றங்களைச் செய்துள்ளார், இதனால் அவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகத் தோன்றினார்.

இந்நிலையில் குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் அந்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts