TamilSaaga

சிங்கப்பூர் Dormitoryயில் சண்டை : பலமாக தாக்கிக்கொண்ட இரு “தமிழக தொழிலாளர்கள்” – ஒருவருக்கு 6 மாத சிறை

சிங்கப்பூரில் மூன்று கேன்கள் பீர் குடித்த பிறகு, ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி சக தங்குமிட குடியிருப்பாளரின் முகத்தில் குத்தியதோடு, அவரது விரலைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்பவாங்கில் உள்ள தங்குமிடத்திலிருந்த மற்ற குடியிருப்பாளர்கள் சண்டையை நிறுத்த வருவதற்குள், அந்த இருவரும் தரையில் உருண்டு பிரண்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய நாட்டவர் ரெங்கசாமி கரல்மார்க்ஸ் (30) இன்று வியாழன் (டிசம்பர் 23) அன்று நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழக இளைஞர்”

கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி மாலை, பாதிக்கப்பட்ட திரு கிருஷ்ணன் கார்த்திகேயன் (35), 51 காக்ரேன் லாட்ஜ் 1-ன் மூன்றாவது மாடியில் இருந்து தனது தண்ணீர் பாட்டிலைக் காலி செய்தபோது அந்த தண்ணீர் கீழே நின்றுகொண்டிருந்த ரெங்கசாமி மீது விழுந்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய வாய் தகராறு பின்னர் அடிதடியாக மாறியது என்று துணை அரசு வழக்கறிஞர் சோங் ஈ சியுன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 5ம் தேதி இரவு, ரெங்கசாமி தனது அறைக்கு வெளியே 3 கேன் பீர் குடித்துவிட்டு குடிபோதையில் இருந்தபோது, ​​மீண்டும் மூன்றாவது மாடியில் இருந்து தண்ணீர் சொட்டுவதை அவர் உணர்ந்தார். அப்போது அவர் முந்தைய மாத சம்பவத்தை நினைவு கூர்ந்து கிருஷ்ணனை எதிர்கொள்ள மாடிக்குச் சென்றார். அவர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசுவதைப் கண்டார், பின்னர் அவர் மூக்கில் குத்தி தரையில் தள்ளியதில் கிருஷ்ணனின் தலையில் காயம் ஏற்பட்டது. கிருஷ்ணன் கீழே விழுந்து கிடந்தபோது, ​​ரெங்கசாமி அவர் மீது பலமுறை தாக்குதலை நடத்துயுள்ளார். மற்றும் அவரது மோதிர விரலைக் கடித்தார், இதனால் இரத்தம் வெளியேறியது என்று டிபிபி சோங் கூறினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு போலீசாருக்கு புகார் செய்யப்பட்டது மற்றும் கிருஷ்ணன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது விரலில் எலும்பு முறிவு, தலையில் சிறிய காயம் மற்றும் காயம் காரணமாக அவருக்கு 14 நாட்கள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது. ரெங்கசாமிக்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வழக்குத் தொடுத்த கிருஷ்னனின் மருத்துவக் கட்டணம் சுமார் 3,880 டாலர்கள் அவரது முதலியால் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts