TamilSaaga

சிங்கப்பூரில் நடுத்தர ஊழியர்களின் வருமானங்கள் எவ்வளவு உயர்ந்துள்ளது தெரியுமா? புள்ளி விவரங்கள் வெளியீடு!

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பள உயர்வுகள் எந்த விகிதத்தில் உயர்ந்துள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 2011ம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நடுத்தர வருமானம் கொண்ட ஊழியர்களின் சம்பளங்கள் மற்ற ஊழியர்களை காட்டிலும் கணிசமாக உயர்ந்து இருப்பதை கணக்கெடுப்பு காட்டுகின்றது. சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆனது இந்த தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

நடுத்தர வருமானம் பெறும் ஊழியர்களின் சம்பளம் 42 சதவீதம் வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதேசமயம் அதிக வருமானம் வெறும் ஊழியர்களின் சம்பளம் 37 விழுக்காடு மட்டுமே கூடியுள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் நடுத்தர வருமானம் பெறும் ஊழியர்களில் ஏறக்குறைய 50 சதவீதம் பேர் அதிகமான ஊழியத்தை பெற்று பயனடைந்துள்ளனர். இதில் 25% விழுக்காட்டினர் 2011 ஆம் ஆண்டிலிருந்து சம்பளம் உயராமல் ஒரே சம்பளத்தில் இருந்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் நடுத்தர வருமானம் பெறும் ஊழியர்களில் அதிக உற்பத்தி திறன் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கு மாறிய ஊழியர்களின் சம்பளமானது பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என தெரியவந்துள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் சிறிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை அதற்கு முந்தியாண்டுகளுடன் ஒப்பிடும் பொழுது 2011ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 3.7% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் 5.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இனிவரும் காலங்களில் சம்பளங்கள் இதேபோன்று நீடிக்குமா என்பது குறித்த கேள்வியை ஆணையம் எழுப்பி உள்ளது. தற்பொழுது அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது .இந்த தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு மாற்றாக அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டால் ஊழியர்களின் வேலையானது பாதிக்கப்படும் என்பதால் வருமானத்திலும் இதன் தாக்கமானது பிரதிபலிக்கும் என தெரிவித்துள்ளது. எனவே வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மனிதர்களும் மாறினால் மட்டுமே இனிவரும் காலங்களில் அதிக ஊதியம் பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொழிலாளர் தேவை குறைய வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts