TamilSaaga

சிங்கப்பூரில் இருக்கும் வொர்க் பாஸ் ஊழியர்களா… மார்ச் மாதத்தில் இந்த ப்ளான் இருக்கா… அப்போ நீங்க இதில் உஷாரா இருக்கணும்.. உங்களுக்கும் இந்த பிரச்னை வரலாம்!

சிங்கப்பூரில் இருக்கும் ஊழியர்கள் எப்போதுமே பரபரப்பாக தான் இருப்பார்கள். காரணம் சிங்கை எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும். இதில் பழக நீங்களும் அப்படி இருக்க வேண்டியது அவசியமாக தான் இருக்கிறது. இது இங்கிருக்கும் ஊழியர்களுக்கு சாதாரணமாக இருந்தாலும் நாட்டிற்குள் புதிதாக வருபவர்களுக்கு முதலில் கொஞ்சம் கஷ்டமாகவே தான் இருக்கணும். அதை சரி செய்ய சிங்கப்பூரினை வந்த சில நாட்களிலேயே நன்றாக சுற்றி பாருங்கள். அப்போது இந்த நாடும் உங்களுக்கு நன்றாக பழக்கமானதாகவே ஆகிடும்.

விடுமுறை நாட்களில் சிங்கப்பூரின் எல்லா தளங்களுமே நிரம்பி வழியும். அந்த அளவு, சிங்கையில் இருக்கும் அனைவரும் விடுமுறையை சரியாக பயன்படுத்துவார்கள். அதைப்போன்ற மார்ச் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் இருந்து சுற்றுலா கிளம்ப அனைவரும் ஆயத்தமாகி விட்டனர். இதனால் அருகில் இருக்கும் மலேசியாவிற்கு படையெடுக்கும் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதைப்போன்று அங்கிருந்து சிங்கப்பூர் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தை தொட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: பாத்து பக்குவமா சிங்கப்பூரில் இருந்து விமானம் ஏறிடுறோம்.. ஆனா, நம்ம கூட்டிட்டு வரும் Pilotஸ்… அவங்களுக்கும் பிரச்னை இருக்குனு யோசிச்சிருக்கோமா… இப்டிலாமா இருக்கு! அடியாத்தி!

இதனால் land checkpointsல் எக்கசக்க ட்ராபிக் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை தவிர்க்க சில அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) One Motoring இணையதளம் மூலமாகவோ அல்லது BKE மற்றும் AYEல் நிறுவப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ்வே கண்காணிப்பு மற்றும் ஆலோசனை அமைப்பு மூலமாகவோ land checkpointsல் போக்குவரத்து நிலைமையைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் ICAன் Facebook மற்றும் Twitter கணக்குகள் மற்றும் Money 89.3, Kiss92, One 91.3, Hao 96.3, UFM 100.3 ஆகிய உள்ளூர் ரேடியோ ஒளிபரப்புகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் மற்றும் மலேசியர்கள் உட்பட தகுதியுடைய முதல் முறை வெளிநாட்டுப் பார்வையாளர்கள், பேருந்தில் பயணம் செய்து வரும்போது, பயணிகள் ஹால்களில் தானியங்கி பாதைகள் வழியாக இமிகிரேஷனை க்ளியர் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். தானியங்கு பாதைகளைப் பயன்படுத்த தனியான பதிவுச் செயல்முறை தேவையில்லை.

வாகன ஓட்டிகள் நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ICAவுடன் இணைந்து Traffic Police முக்கியமான சந்திப்புகளில் சாலை விதிகளை சரியாக பின்பற்ற land checkpointsல் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்திரலோகத்தின் வனமே இறங்கி வந்ததோ! வருடத்திற்கு 85 மில்லியன் பயணிகள்… எண்ணற்ற ஆச்சரியத்தால் மூச்சு முட்ட வைக்கும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்

பயணிகள் மேலும் சிலவற்றினை மறந்து விடக்கூடாது:

  • பாஸ்போர்ட் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகுமாறு வைத்திருக்க வேண்டும்.
  • தங்களுடைய பாஸ்போர்ட்டை புதுப்பித்த சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் தங்கள் மறு நுழைவு அனுமதியை புதிய பாஸ்போர்ட்டுக்கு மாற்ற வேண்டும்.
  • Long-term பாஸ் வைத்திருப்பவர்களாக கருதப்படும் E Pass, S pass, Work Permit, Student’s Pass, Long-Term Visit Pass மற்றும் Dependant’s Pass, பாஸ்போர்ட்டில் எதுவும் மாற்றம் இருந்தால் ICA அல்லது மனிதவளத்துறையிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • அனைத்து Long-term பாஸ் வைத்திருப்பவர்கள், நீண்ட கால அனுமதிக்கான IPA பெற்றவர்கள் உட்பட, சிங்கப்பூர் வருவதற்கு முன் மூன்று நாட்களுக்குள் தங்கள் Singapore Arrival Cardன் ஹெல்த் declaration சமர்ப்பிக்க வேண்டும். அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் வேலை மற்றும் படிப்புக்கான தினசரி பயணங்கள் காரணமாக, சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் (சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள்) land checkpoints வழியாக சிங்கப்பூருக்குத் திரும்பினால், health declaration சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டுப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் செல்லுபடியாகும் வாகன நுழைவு அனுமதி, LTA ஒப்புதல் மின்னஞ்சல் மற்றும் ஆட்டோபாஸ் அட்டை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் சில:

  • தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வர வேண்டாம் என்றும் பயணிகளுக்கு நினைவூட்டப்படுகிறது. புகையிலை பொருட்கள் போன்ற வரிக்கு உட்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை கொண்டு வருபவர்கள் சரிபார்க்கப்படுவதற்கு முன்பு அவற்றை அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
  • சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரில் இருந்து புறப்படுபவர்கள் “three-quarter tank” விதியை பயன்படுத்த அறிவிறுத்தப்படுகிறார்கள். மீறினால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts