சிங்கப்பூரின் அடையாளமாக இருக்கும் சாங்கி ஏர்போர்ட். உலகத்திலேயே மிகச்சிறந்த ஏர்போர்ட் என்ற பெயரினை பல வருடமாக தக்க வைத்து கொண்டு வருகிறது. அதன் சிறப்பம்சம் குறித்து உங்களுக்கு தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு. தொடர்ந்து படியுங்கள்.
ஏர்போர்ட் என்றால் பலருக்கு விமான ஏறப்போற நிலையம் என்ற ஒற்றை சொல்லில் முடித்து விடுவார்கள். ஆனால் சிங்கப்பூரின் விமான நிலையமான சாங்கியில் சிறப்புக்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
நவம்பர் 2020 நிலவரப்படி, உலகெங்கிலும் உள்ள 100 நாடுகளில் மற்றும் territoriesகளில் இருக்கும் 400 நகரங்களுக்கு 100க்கும் மேற்பட்ட விமான சேவைகளை சாங்கி விமான நிலையம் வழங்குகிறது. ஒவ்வொரு வாரமும் சுமார் 7,400 விமானங்கள் சாங்கிக்கு வந்து செல்கின்றன. இது ஒவ்வொரு 80 வினாடிக்கும் ஒன்று என கணக்கிடப்படுகிறது.
சாங்கி விமான நிலையத்தில் நான்கு முக்கிய பயணிகள் terminals உள்ளன. நீளமான தலைகீழ் ‘U’ வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய, நிலவரப்படி விமான நிலையம் வருடத்திற்கு 85 மில்லியன் பயணிகள் வந்து போகும் வசதியை கொண்டுள்ளது. 2019 இல் மட்டும் 28 “சிறந்த விமான நிலையம்” விருதுகள் உட்பட 620 க்கும் மேற்பட்ட விருதுகளை சாங்கி
விமான நிலையம் வென்றுள்ளது.
ஜூவல் சாங்கி விமான நிலையம், 17 ஏப்ரல் 2019 அன்று திறக்கப்பட்டது. இது டெர்மினல்கள் 1, 2 மற்றும் 3 ஒன்றோடொன்று இணைக்கும். இது 3.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அங்கு டெர்மினல் 1 கார் பார்க்கிங் இருந்தது. சாங்கி ஏர்போர்ட்டில் Rain Vortex உலகின் மிக உயரமான உட்புற நீர்வீழ்ச்சிக்கான உலக சாதனையைப் பெற்றுள்ளது.
ஜூவல் சாங்கி விமான நிலையத்தினை பார்வையிட ஒரு நாளைக்கு சுமார் 300,000 பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள். ஒரு நிமிடத்திற்கு 37,850 லிட்டர் என்ற அளவில் வட்டத் துளை வழியாக மறுசுழற்சி நீர் jewel கூரையின் மேல் பம்ப் செய்யப்படுகிறது.
சாங்கி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ 3,000 சதுர மீட்டர் நிலபரப்பில் அமைந்துள்ளது. இதில் விளையாட்டுகள் மற்றும் சாங்கி விமான நிலையத்தின் வரலாறு தொடர்பான காட்சிகள் மற்றும் விமான நிலையம் எவ்வாறு இயங்குகிறது என்பதை பார்க்க அனுமதிக்கிறது.
முழுக்க முழுக்க பசுமையை பறைசாற்றும்படி அமைந்திருக்கும் சாங்கி விமான நிலையம் அதே பொழிவுடன் மாறாமல் முதல் நாள் போன்றே காணப்படுகிறது. சாங்கியில் உள்ள பல cacti உண்ணக்கூடியவை மற்றும் மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளன. சிங்கப்பூரின் தேசிய வண்ணத்துப்பூச்சி உள்ளது. அதை நீங்கள் சாங்கியில் பார்க்கலாம். பல இயற்கை அனுபவங்களை இலவசமாக கண்டு ரசிக்க சாங்கி விமான நிலையம் இருக்கிறது.
இதனால் தான் சாங்கி உலகின் சிறந்த விமான நிலையமாக உள்ளது என்பதில் ஆச்சரியமில்லை. உங்கள் விமானத்திற்கு முன் இயற்கையின் மத்தியில் செமையான அனுபவத்தினை பெற்றுக்கொள்ளுங்கள். இதற்கு உங்களுக்கு தேவையான ஒரே டிக்கெட் உங்கள் போர்டிங் பாஸ் மட்டுமே.