TamilSaaga

சிங்கப்பூரில் 3000 வெள்ளி சம்பளம் தரும் SPass… உங்களுக்கு கிடைக்குமா? சில நொடிகளில் தெரிஞ்சிக்கலாமா? வீட்டில் இருந்தபடியே கண்டுபிடிங்க சூப்பர் வேலையோட செட்டில் ஆகுங்க!

சிங்கப்பூர் வேலையில் இருக்கும் சிலருக்கு பெரிய ஊதியத்தில் வேலை வேண்டும் என்ற ஆசை இருக்கும். கிட்டத்தட்ட $3000 சிங்கப்பூர் டாலர் முதல் $6000 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் கொடுத்து வருகிறது S-Pass மற்றும் E-Passகள். உங்களுக்கும் அப்படி ஒருவேலை வாங்கி தருகிறேன். இத்தனை லட்சம் தாருங்கள் என யாரும் காசு கேட்டால் ஒரு நிமிஷம் இருங்க.

இதை தொடர்ந்து படிச்சீங்கனா, உங்களுக்கு S-Pass அல்லது E-Pass கிடைக்குமா என்பது தெரிந்து விடும். S Pass ஆனது Mid-Level skilled பணியாளர்களை சிங்கப்பூரில் வேலை செய்ய அனுமதிக்கிறது. விண்ணப்பதாரர்கள் மாதம் குறைந்தது $3,000 சம்பாதிக்க வேண்டும். தொடர்ந்து நீங்கள் டிகிரியோ அல்லது டிப்ளமோவோ படித்திருக்க வேண்டும்.

EPass வெளிநாட்டு தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிங்கப்பூரில் பணியாற்ற அனுமதிக்கிறது. விண்ணப்பதாரர்கள் மாதம் குறைந்தபட்சம் $5,000 சம்பாதிக்க வேண்டும். படித்திருப்பதால் நமக்கு இந்த பாஸ்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தால் நொடியில் நீங்கள் இந்த பாஸிற்கு தகுதியுடையவரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

https://www.mom.gov.sg/eservices/services/employment-s-pass-self-assessment-tool இந்த லிங்கினை க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள். இதில் செக் S-Pass மற்றும் E-Pass Eligibity என்று இருக்கும். அதனை க்ளிக் செய்தால் இன்னொரு பக்கம் திறக்கும்.

அதில் உங்களின் கல்வி தகுதி, சம்பளம், அனுபவம் ஆகியவை குறிப்பிடும்படி கேட்பார்கள். உங்கள் தகவலை உள்ளிட்டால் நொடியில் நீங்கள் இந்த பாஸிற்கு தகுதி பெறுவீர்களா என்பதை கூறிவிடும். மேலும், நீங்கள் உள்ளிடும் தகவலை வைத்தே ரிசல்ட் வருவதால் விண்ணப்பிக்கும் போதும் இதே தான் வரும் என்பது உத்தரவாதம் அல்ல. ஏனென்றால், இந்த மதிப்பீட்டில் கருத்தில் கொள்ளப்படாத உங்களுக்கு வேலை வழங்க இருக்கும் கம்பெனியின் கோட்டா கணக்கில் கொள்ளப்படும் என்பதால் ஒரு சிலருக்கு இதில் மாற்றம் இருக்கலாம்.

விண்ணப்பதாரர் SPassக்குத் தகுதியானவரா என்பதைச் சரிபார்க்க, கம்பெனி நிர்வாகமும், ஊழியர்களும் SATல் செக் செய்யலாம். விண்ணப்பதாரர் தகுதியானவர் என்று SAT காட்டினால் மட்டுமே, அந்த நிறுவனம் SPassக்கு விண்ணப்பிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், விண்ணப்பதாரர் தகுதியானவர் என்பதை SAT காட்டினாலும் ஒரு சிலருக்கு S-Pass ரிஜக்ட் ஆகவும் வாய்ப்பு உண்டு. வொர்க் பெர்மிட்டில் இருந்து SPassக்கு மாறும் ஊழியர்கள் உடனே பெரிய ஊதியத்திற்கு மாறும் போது இப்படி நடக்கலாம்.

இப்போது நீங்க படித்த கல்வி நிறுவன பெயர் SATல் இல்லையென்றால் உங்கள் சான்றிதழில் இருக்கும் பெயரை டைப் செய்யவும் வாய்ப்பு இருக்கும். பெரும்பாலும் உலகில் இருக்கும் பெரிய கல்வி நிறுவனங்கள் SATல் இடம் பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கல்வி தகுதி இல்லையென்றால் அதற்கு ஈடான ஒன்றினையும் தேர்வு செய்யலாம். செமல!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts