TamilSaaga

பாத்து பக்குவமா சிங்கப்பூரில் இருந்து விமானம் ஏறிடுறோம்.. ஆனா, நம்ம கூட்டிட்டு வரும் Pilotஸ்… அவங்களுக்கும் பிரச்னை இருக்குனு யோசிச்சிருக்கோமா… இப்டிலாமா இருக்கு! அடியாத்தி!

விமானத் துறையில் சேர்ந்து விட்டால் போதும் கோடி கோடியா சம்பாதிக்கிறாங்கப்பா என நினைக்கத்தான் எல்லாருக்குமே தோணும். ஆனா அந்த Pilot களுக்கு விமானத்தினை ஓட்டும் போது ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும். அதையெல்லாம் தாண்டி தான் அவர்கள் நம்மை ஒரு இடத்தில் இருந்து கடல் கடந்து வேறு இடத்துக்கு கூட்டி செல்கிறார்கள்.

எப்படி இருக்கும் Pilot வாழ்க்கை என்பது குறித்து தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்க. Co-pilot என்று சொல்லப்படும் Junior First Officer க்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை சம்பளமாக இருக்கும். அப்புறம் 700-800 மணி நேரம் விமானம் ஓட்டிய பிறகு First Officer ஆகலாம். அப்புறம் சம்பளம் வேற லெவலில் இருக்கும். மூன்றில் இருந்து ஏழு லட்சம் வரை இருக்கும்.

முதல் சில நொடிகள் ஒரு விமானம் மேலே எழும்புவதற்கு ஓடக் கூடிய தூரம் மட்டுமே 2-3 கிலோமீட்டர் இருக்குமாம். அப்போது விமானிகள் விமானத்தினை 240-270 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க வேண்டுமாம். அதைப்போன்றே இறங்கும் போது 20-30 கிலோமீட்டர் வேகத்தினை குறைத்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: எவ்ளோ மூஞ்ச காட்டினாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்.. சைட் அடிக்கும் கண்களுக்கும் தாயாக இருக்கணும் – துன்பமும், துணிச்சலும் நிறைந்த Air Hostess-களின் வாழ்க்கை!

இது மட்டுமல்லாமல் Pilot மற்றும் Co-Pilot என இருவருமே தாடி வைக்கக் கூடாது, முழுக் கை சட்டை போடக் கூடாது. ஒரு விமானி பாத்ரூம் செல்கிறார் என்றால், ஒரு Air hostessஐ அழைத்து cockpit இல் உட்கார வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும். ஒரு வேளை அந்த மற்றொரு விமானி தூங்கி விட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ அந்த cockpit டின் கதவைத் திறந்து விடுவதற்கு தான் இப்படி செய்கிறார்கள்.

நீண்ட நேர விமானத்தில் விமானிகள் உறங்குவதற்கு தனியாக பங்க் பெட் உண்டு. அதுப்போல இந்த வகை விமானங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை Air Hostess விமானியுடன் வந்து பேச வேண்டும். இரண்டு விமானிகளும் தூங்கி இருக்கலாம் அல்லது இரண்டு பேரும் இறந்து இருக்கலாம். இது ஒரு அதிகபட்ச பாதுகாப்பு முறையாக கருதப்படுகிறது. அப்படி ஒரு அவசியம் ஏற்பட்டால் Air hostessஆல் மட்டுமே cockpit அறைக்குள் நுழைய முடியும்.

பொதுவாக விமானி உள்ளூர் விமானங்களின் உயரத்தினை குறைத்து தான் இயக்க வேண்டும். வெளிநாடு செல்லும் விமானங்கள் கொஞ்சம் உயரம் அதிகமா பறக்கலாம். விமானங்கள் குறைந்தது 10000 அடி முதல் அதிகபட்சமாக 44000 அடி வரை பறக்கலாம். ஆனால் ஒரு விமானத்தால் 66000 அடி கூட பறக்க இயலும், ஆனால் அதற்கு அனுமதி கிடையாது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

சரி விமானத்தின் இன்னொரு ஸ்பெஷலையும் சொல்றேன் கேளுங்க. விமானத்தின் முக்கியமான ஒரு அங்கம் “Black Box”. அதற்குப் பெயர் கருப்பு பெட்டி தான் ஆனால் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இது விமானத்தின் வாலில் இருக்கும், ஏன் என்றால் விபத்து ஏற்பட்டால் அந்தப் பகுதி அவ்வளவு எளிதில் உடையாது. இதனால் கடைசியாக விமானத்தில் நடந்த உரையாடலை வைத்து விபத்து எப்படி நடந்து இருக்கலாம் என அறிந்து கொள்ளவே இப்படி வடிவமைத்து உள்ளனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts