TamilSaaga

சிங்கப்பூரில் சுற்றுலா விசாவில் வந்து வேலை தேடலாமா? சிக்கினால் தண்டனைய விடுங்க… இந்த விஷயத்த யோசிச்சீங்களா?

சிங்கப்பூரில் வாழ்க்கை தேடி முறையாக வரும் பலர் மத்தியில் காசு பிரச்னையாலோ சரியான ஏஜென்ட் கிடைக்காததாலோ வேலை தேடுவதற்கு சில அங்கீகாரமற்ற முறைகளில் வேலை தேடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். வேலைக்கான பாஸ்களுக்கு பெரிய லகரத்தில் கட்டணம் கேட்கப்படும். இதை கொடுத்து தைரியமாக பலர் வந்து விடுகிறார்கள். ஆனால் சிலர் கம்மி செலவில் வேலைக்காக டூரிஸ்ட் விசாவில் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் சிலருக்கு வேலை கிடைத்தாலும் கண்டிப்பாக இதை நீங்கள் செய்யவே கூடாது. இதனால் நீங்கள் சந்திக்க இருக்கும் பிரச்னை குறித்து இந்த பதிவில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூரில் tourist விசாவில் வந்து வேலை தேடிக்கொண்டு அப்படியே வொர்க் விசாவில் மாறிக்கொள்ளலாம் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. இப்படி நீங்கள் அத்துமீறி சிங்கப்பூருக்குள் வந்து வேலை தேடும் போது சிக்கினால் உங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். கிட்டத்தட்ட சிறைத்தண்டனையுடன் சவுக்கடியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும். சாதாரணமாக யோசித்து பாருங்கள். உங்களுக்கு சிங்கப்பூருக்கான Tourist visa எடுக்க இந்தியாவில் 3000 ரூபாயிற்கு மேல் செலவுகள் இருக்கும். அடுத்து சிங்கப்பூர் வருவதற்கான விமான டிக்கெட் இது குறைந்தது 25000 ரூபாயில் இருந்து தொடங்கும்.

இதையும் படிங்க: Skill டெஸ்ட் அடிக்காமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா? இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கா? இத படிங்க செம Clarity கிடைக்கும்!

சீசன் நேரத்தில் இதன் விலை இன்னும் அதிகமாக இருக்கும். அடுத்து, சிங்கப்பூர் வந்தவுடன் தங்க இடம் வேண்டும். தெரிந்தவர்கள் இருந்து சிங்கைக்குள் வந்தால் தப்பித்தீர்கள் இல்லையா ஒரு நல்ல ஹாஸ்டலாவது பார்க்க வேண்டும். அதற்கு 30 நாட்களுக்கு $600க்கு மேல் சிங்கப்பூர் டாலர் செலவாகும். இந்திய மதிப்பில் கணக்கிடும் போது 36000 ஆயிரம் ரூபாயாக கணக்கிடப்படுகிறது.

முக்கியமாக, சாப்பிடுவதற்கு அதிகபட்சமாக $300 சிங்கப்பூர் டாலர்க்கு மேல் செலவாகும். இந்திய மதிப்பில் 18000 ஆயிரம் ரூபாயாக இருக்கும். அடுத்து உங்களின் தொடர்புக்கான மொபைல், ட்ராவல் மற்றும் பிற செலவுகளுக்கு சேர்த்து $50 முதல் $100 சிங்கப்பூர் டாலர் செலவாகும். முக்கியமானது, சிங்கப்பூரில் மருத்துவம் ரொம்பவே காஸ்ட்லி என்பதால் கண்டிப்பாக $100 ரூபாயிற்கு இன்சுரன்ஸ் எடுத்து வைப்பது நல்லது. இந்த செலவுகள் எல்லாம் சேர்த்தால் ஏறத்தாழ ஒரு லட்சத்தினை நெருங்கி விடும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்காக EPass இருக்கு தெரியும்.. அதென்னப்பா PE Pass… மாதம் இத்தனை லட்சத்தில் சம்பளமா? அம்மாடி! தெரிஞ்சிக்கோங்க உங்களுக்கு கூட கிடைக்கலாம்!

பல கம்பெனிகள் வேலைக்காக ஏறி இறங்க வேண்டும். சில நிறுவனங்கள் இரண்டு அல்லது மூன்று கட்டமாக நேர்காணல் நடத்தி ஆட்களை தேர்வு செய்வார்கள். உங்கள் அதிர்ஷ்டத்தில் முதல் கம்பெனியே ஓகே ஆகிவிட்டால் கூட அவர்கள் உங்களுக்கு IPA அப்ளே செய்ய வேண்டும். அதற்கு கிட்டத்தட்ட 2ல் இருந்து 3 வாரங்கள் எடுக்கும். அது வந்தால் மட்டுமே உங்களால் 30 நாட்களை தாண்டியும் சிங்கப்பூரில் தங்க முடியும்.

இல்லாத பட்சத்தில் நீங்கள் வேலையில் தேர்வானால் கூட IPA வராத காரணத்தினால் உடனே நாட்டினை விட்டு வெளியேற நேரிடும். இந்த யூகமும் முதல் கம்பெனி ஓகேயானால் மட்டுமே, இரண்டு அல்லது மூன்று கம்பெனி என இந்த முயற்சி நீண்டால் யோசித்து பாருங்கள். கிடைக்காத வேலைக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக செலவு மட்டுமே செய்வது நல்லதாக இருக்குமா?

இதை விட நேரில் வேலை தேடும் போது எந்த நிறுவனமும் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் என நினைக்காதீர்கள். வெளிநாட்டு ஊழியர்கள் எல்லாருமே ஒரே தராசில் தான் இருப்பார்கள். அதை விட இல்லீகலாக வேலை தேடும் உங்களை விட சட்டரீதியாக வரும் ஊழியர்களுக்கு தான் முன்னுரிமையும் கிடைக்கும். இதனால் வேலை தேடுவதை தமிழ் நாட்டில் இருந்து செய்யுங்கள். காசு செலவினை குறைக்க பல வேலைவாய்ப்பு தளங்கள் கூட இருக்கிறது.

இல்லையென்றால் இன்னும் 1 லட்சம் கூட செலவு செய்தால் ஸ்கில் அடித்தோ உங்க கல்வி தகுதிக்கு ஏற்ற பாஸிலோ வேலைக்கு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts