TamilSaaga

சிங்கப்பூரின் மிகப்பெரிய Skate park… இனி ஹாலிடேக்கு செம ஸ்பாட்…ஃபீஸ் எவ்வளோ தெரியுமா?

அனைத்து நிலைகளிலும் உள்ள ஸ்கேட்போர்டர்கள் சிங்கப்பூரின் லேக்சைட் கார்டனில் அமைந்துள்ள மிகப்பெரிய ஸ்கேட் பூங்காவில் தங்கள் பயிற்சிகளை தொடர்ந்து செய்யலாம். இனி இதில் ஐந்து ஸ்கேட் பாட்கள் வெவ்வேறு ரைடர்ஸ் குழுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பநிலையாளர்களுக்கான லேர்ன் டு ஸ்கேட் பாட் மென்மையான சரிவுகளைக் கொண்டுள்ளது. அதே சமயம் அனுபவம் வாய்ந்த ஸ்கேட்டர்களுக்கான பிக் பவுல் பாட் செங்குத்தான வடிவமைப்பினை கொண்டுள்ளது மற்றும் 2.5மீ ஆழம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கடன் வாங்கியவர்களிடம் பணத்தினை வசூலிக்க நூதன ஐடியா… ரன்னர்களை வைத்து எரிச்சல் தரும் சித்தரவதைகள்… இதில் சிக்கினால் என்ன தண்டனை தெரியுமா?

பங்குதாரர்கள் பல நிலைகளில் பயிற்சிக்கான விருப்பங்களைக் கொண்ட ஸ்கேட் பூங்காவை விரும்புவதாகப் பகிர்ந்து கொண்டனர். இது ஸ்கேட் டைபாலஜி மற்றும் ஐந்து ஸ்கேட் பாட்களின் வடிவமைப்பை உருவாக்கி இருக்கிறது என்று தேசிய பூங்கா வாரியம் (NParks) கூறியது. ஏறக்குறைய 17,000 சதுர மீ ஸ்கேட் பூங்கா, லேக்சைட் கார்டனின் 7 ஹெக்டேர் வடக்குப் பகுதியின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இது சனிக்கிழமையான இன்று (ஏப்ரல் 1) திறக்கப்பட்டது.

2019ல் லேக்சைட் கார்டன் திறக்கப்பட்ட முதல் கட்டத்தின் போது, இயற்கை விளையாட்டுத் தோட்டம், நீர் விளையாட்டுப் பகுதி மற்றும் ஈரநிலப் பாதைகள் திறக்கப்பட்டன. NParks தோட்டத்திற்கு இதுவரை சுமார் 17 மில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர். லேக்சைட் கார்டனில் உள்ள ஸ்கேட் பாட்களில் மிகப் பெரியது பிளாசா பாட் ஆகும், இது 900 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து வானிலை பயன்பாட்டிற்காகவும் பாதுகாக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கலைக்கட்டும் வேலைவாய்ப்புகள்… இந்த டாப் 10 துறைகளில் தான் Vacancy இருக்கு? முதல படிங்க அப்புறம் செம careerஐ பிடிங்க!

ஸ்கேட் செய்பவர்களின் கருத்துகளின் அடிப்படையில், பூங்கா பரந்த நடைபாதைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தளத்திலும் நிழலுக்கான சிறிய தங்குமிடம் உள்ளது. NParks, பாதுகாப்பு உபகரணங்களின் தேவை போன்ற பயன்பாட்டு நிபந்தனைகளுடன் ஸ்கேட் பார்க் பார்க்கில் பலகைகளையும் வைக்கிறது. ஜூராங்க் பகுதியில் இருக்கும் இந்த lakeside garden பார்க்கிற்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts