TamilSaaga

சிங்கப்பூரில் கொரோனாவுடன் வாழ வேண்டிய சூழல்: ஆசியான் – ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேச்சு

நேற்று பிற்பகலில் ஆசியான் மற்றும் ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

“கடந்த ஜீன் 2020ஆம் ஆண்டு கண்டதை விட உலக நாடுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

கொரோனா தொற்றுடன் வாழ்வது எப்படி என்பது தொடர்பாக ஒரு நல்ல உரையாடலை நாங்கள் மேற்கொண்டோம். அது வரவிருக்கும் தொற்று நோய்க்கு பிறகான இயல்பு நிலை திரும்பலுக்கும் அதன் பிறகான மீட்புப் பணி மற்றும் பாதுகாப்புக்கும் பயணுள்ளதாக இருந்தது.

பல்வேறு பிராந்தியங்களில் வளர்ந்து வரும் கட்டிடக்கலை மற்றும் முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்தோம்” என அமைச்சர் விவயன் பாலகிருஷ்ணன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட 5 அம்ச ஒருமித்த கருத்தை செயல்படுத்தும் முயற்சிகளுக்கு ரஷ்யா ஆதரவளிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

இந்த ஆண்டில் மேலும் ஒரு சிறப்பாக ஆசியான் – ரஷ்யா உறவின் 30 ஆண்டுகால நிறைவும், ரஷ்யா – ஆசியான் உரையாடல் உறவுகளின் 25 ஆண்டுகால நிறைவையும் கூட்டத்தில் நினைவு கூறப்பட்டது.

இந்த நாடுகளின் கூட்டாட்சி சிறப்பான எதிர்காலத்தை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த கூட்டத்தை தலைமை தாங்கிய இபுரெட்னா மார்சுடி மற்றும் செர்ஜி லாவ்ரோவ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

“கோவிட் நெருக்கடியிலிருந்து வெளிவர இந்த உரையாடல் மற்றும் கூட்டு நாடுகளுடனான எங்கள் ஈடுபாட்டை ஆசியான் வைத்திருப்பது அவசியம்” என்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts