TamilSaaga

‘இவர்கள் இருசக்கர இறைவன்’ – கொரோனா நேரத்தில் கைகொடுக்கும் இளைஞர்கள்

பெருந்தொற்று நோய் பரவல் காலத்தில் முடிந்தவரை மற்றவர்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும் என்பதை உலகிற்கு அவ்வப்போது பல விஷயங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்தோனேசிய ஆடவர் ஒருவர் அந்த விஷயத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இந்தோனேஷிய தலைநகர் ஜக்கர்த்தாவில் போக்குவரத்து நெரிசலுக்கு மிகவும் பெயர் பெற்ற நிறைய இடங்கள் உண்டு. இந்நிலையில் தற்போது அந்த பகுதியில் கொரோனா நோய் தெற்று பரவலும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகம் உள்ள அந்த பகுதியில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் எப்போதும் ஏற்பட்டு வருகின்றது. தற்போது இதற்கு தீர்வு ஒன்றை கண்டுள்ளார் 24 வயதான செபாஸ்டின்.

சில தொண்டு நிறுவனங்கள் உதவியோடு ஒன்று அல்லது இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் அவசர ஊர்திகளுக்கு முன்பு ஒலியெழுப்பியவரே செல்கின்றனர். இதனால் அந்த அவரச வாகனங்களுக்கு எளிதில் வழிகிடைத்து பல நோயாளிகளை உடனடியாக மருதுவானமைக்கு கொண்டுசெல்ல முடிகின்றது என்று கூறப்படுகிறது.

இது சற்று ஆபத்தான விஷயம் என்றபோதும் தற்போதைய நிலையில் இது மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்வதாக செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

Related posts