TamilSaaga

“பொது சுகாதார அவசரநிலை” : 8 மில்லியன் மதிப்பிலான மருத்துவப் பொருட்களை வழங்கும் சிங்கப்பூர்

இந்த பெருந்தொற்று சிங்கப்பூரை மட்டுமல்ல உலகையே ஒரு வித பயமான மனநிலைக்கு தள்ளியுள்ளது என்றால் அது.மிகையல்ல. தொற்று பரவல் ஒருபுறம் இருக்க எதிர்காலத்தை நினைத்து பயமோ மறுபுறம் நம்மை ஆட்கொள்கிறது. இந்நிலையில் சிங்கப்பூர் – எதிர்கால பொது சுகாதார அவசரநிலைகளுக்குத் தயாராகும் ASEAN-னின் (The Association of Southeast Asian Nations) கூட்டு முயற்சிக்கு நகர-மாநிலத்தின் ஆதரவின் ஒரு பகுதியாக, நமது சிங்கப்பூர் அரசு 7.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள மருத்துவப் பொருட்களை பிராந்திய இருப்புக்குப் பங்களிக்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட (அக்டோபர் 26) அறிக்கையில் அறிவித்தார்.

முக்கிய மருந்து நிறுவனங்களான BioNTech, Sanofi மற்றும் Thermo Fisher Scientific ஆகியவை சிங்கப்பூரில் தடுப்பூசி உற்பத்தி வசதிகளை அமைக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. புருனே சுல்தான் ஹசனல் போல்கியா தலைமையிலான 10 நாடுகளின் கூட்டத்தின் முதல் மூன்று நாட்களுக்கான கூட்டங்களின் தொடக்கத்தில், தென்கிழக்கு ஆசியாவில் இருந்து தனது சகாக்களுடன் ஒரு மெய்நிகர் காணொளி வழியாக ASEAN உச்சி மாநாட்டில் பிரதமர் லீ பேசினார்.

இந்த மாநாட்டில் பேசிய லீ, தடுப்பூசிகளுக்கான அணுகலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மேற்கோள்லிட்டு காட்டினார். மேலும் சிங்கப்பூர் தடுப்பூசியின் உலகளாவிய அணுகல் (Covax) வசதி மூலம் தடுப்பூசி ஒதுக்கீட்டை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியதாகக் குறிப்பிட்டார். கடந்த செப்டம்பர் 2021ல், சிங்கப்பூர் Covaxன் கீழ் வாங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 1,22,000 டோஸ்களை இந்தோனேசியாவில் உள்ள பாட்டம் மற்றும் ரியாவ் தீவுகளுக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரதமர் லீ பேசியபோது, மற்ற உறுப்பு நாடுகளுக்கும் ASEANன் செயலகத்திற்கும் நிதிகளை சிங்கப்பூர் அதன் ஒதுக்கீட்டின் வழி பங்களிக்கும் என்றார்.

Related posts