TamilSaaga

“தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள்” : சோதனை செலவை முதலாளிகள் ஏற்கவேண்டுமா? விளக்கமளிக்கும் MOH மற்றும் MOM

சிங்கப்பூரில் பணியிடத்திற்குத் திரும்பும் ஊழியர்கள், அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 1 முதல் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கடந்த 270 நாட்களில் பெருந்தொற்று நோயிலிருந்து முழுமையாகத் குணமடைந்திருக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியானது. மேலும் சிங்கப்பூரில் சுமார் 1,13,000 தடுப்பூசி போடப்படாத தொழிலாளர்கள் உள்ளனர் என்றும். அதில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே பெருந்தொற்று தடுப்பூசிக்கு மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் கூறப்படுகிறது. சுமார் 14,000 தடுப்பூசி போடப்படாத தொழிலாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் நோய்த்தொற்றால் கடுமையான நோய் அல்லது இறப்புக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்களை சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 23) வெளியிட்டது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் அல்லது தொற்றிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே பணியிடத்திற்குத் திரும்ப முடியும் என்று அறிவித்தது. MOH மற்றும் MOM, சிங்கப்பூரின் பணியாளர்களில் 96 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும், 70 சதவீத நிறுவனங்கள் அக்டோபர் 17ம் தேதி வரை தங்கள் ஊழியர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜைப் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் தடுப்பூசி-வேறுபடுத்தப்பட்ட நடவடிக்கைகளின் சமீபத்திய விரிவாக்கம், தடுப்பூசி போடப்படாதவர்கள் பணியிடத்திற்குத் திரும்புவதற்கு முன்பு தொற்றுக்கு எதிர்மறையான சோதனை செய்ய வேண்டும் என்பதாகும். இந்த ஆன்டிஜென் விரைவான சோதனைகளுக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும், இதன் முடிவுகள் 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என்பது அனைவரும் அறிந்ததே.

பணியிடத்திற்குப் வரவேண்டிய எனது தடுப்பூசி போடப்படாத ஊழியர்களுக்கான சோதனைகளுக்கு நான் பணம் செலுத்த வேண்டுமா?

மருத்துவ ரீதியாக தடுப்பூசிகளுக்குத் தகுதியுடைய ஆனால் தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள், MOH-அங்கீகரிக்கப்பட்ட சோதனை வழங்குநரிடம் செய்யப்படும் சோதனைச் செலவுகளைச் சுமக்க வேண்டும். கர்ப்பிணிப் பணியாளர்களுடன் தங்கள் சோதனைச் செலவுகளைப் பகிர்ந்துகொள்வதில் முதலாளிகள் இணக்கமான ஏற்பாடுகள் செய்துகொள்ளவேண்டும். கர்ப்பிணிப் பணியாளர்களின் தேவைகள் மற்றும் கவலைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த நிறுவனங்கள் வலுவாக ஊக்குவிக்கப்படுகின்றன.

மேலும் MOM, MOH-ன் தனி ஆலோசனையின்படி, அவர்கள் அவ்வாறு செய்ய முடிந்தால் அவர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts