சிங்கப்பூரில் இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு (NDP) இரண்டாம் கட்ட High Alter கட்டுப்பாடு எச்சரிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடத்த ஒத்திவைக்கப்பட்டுது என்று பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) நேற்று (ஜூலை 22) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு பதிலாக ஒரு சடங்கு அணிவகுப்பாக மாற்றி வைக்கப்பட்ட தேதியில் நடைபெறும் என அறிவித்துள்ளது.
“இது கடந்த ஆண்டு பதங்கில் நடைபெற்றதைப் போலவே இருக்கும், ஆனால் அது Float@MarinaBay பகுதியில் நடைபெறும்” என்று அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
“ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய வார இறுதி நாட்களில் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட ஹார்ட்லேண்ட் பட்டாசு மற்றும் ரெட் லயன்ஸ் காட்சிகள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜூலை 24 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்ட NDP ஒத்திகை மற்றும் முன்னோட்ட நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
“ஆகஸ்ட் 21 ஆம் தேதி NDO-க்குத் தயாராவதற்கு, பின்னர் சிறிய குழுக்களாக ஒத்திகைகள் நடத்தப்படும்” என்றும் MINDEF கூறியுள்ளது. மெரினா விரிகுடாவைச் சுற்றி கூட்டம் அதிகரிக்கும் வகையில் தேதிகள் இருக்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1966ஆம் ஆண்டிலிருந்து தேசிய தின அணிவக்கு நடைபெற்று வருகிறது. தற்போதைய மாற்றங்கள் அணிவகுப்பு பாதுகாப்பாக நடைபெற வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.