TamilSaaga

லிட்டில் இந்தியாவில் “ஜே ஜே” பட பாணியில் கிடைத்த “காதல் கரன்சி” – நிஜ காதலர்களைத் தேடும் 3 பிள்ளைகளின் தாய் – செம ஸ்டோரி!

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் கிடைத்த மலேசியா RM 1 ரிங்கிட் தாளில், காதல் ஜோடி ஒன்றின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதனை அந்த காதலர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மலேசியா வாழ் தமிழ் பெண்மணி மணியரசி முனுசாமி.

லிட்டில் இந்தியாவில் உள்ள பணம் மாற்றும் வர்த்தகரிடமிருந்து கிடைத்த அந்த பணத் தாளில், காதல் சின்னமும், ஒரு காதல் ஜோடியின் பெயர்களும், ஜூன் 12, 2005 என்ற தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த மணியரசியின் நினைவலைகள் அவரது கடந்த காலத்துக்கு சென்றுவிட்டன.

இப்போது 40 வயதான மணியரசி, அப்போது தனது காதலரிடம் காதலை வெளிப்படுத்த இதே போன்று தான் மலேசிய 1 ரிங்கிட் தாளில் தனது பெயரையும் தனது காதலரின் பெயரையும், காதல் சின்னத்தையும் வரைந்து அதனை ஒரு சட்டைபோல் தைத்து தமது காதலருக்குக் பரிசாக கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் வரும் இந்திய தொழிலாளர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் Driving License எடுக்க PDL கட்டாயமா? – எளிமையாக Online மூலம் Apply செய்வது எப்படி?

அதன் பிறகு, எல்லாம் சுமூகமாக செல்ல, தனது காதலரை மணமுடித்து முத்தான மூன்று பிள்ளைகளையும் பெற்றெடுத்த மணியரசிக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக மணமுறிவு ஏற்பட்டது.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் உணவு பானத் துறையில் மணியரசி பணியாற்றி வருகிறார். ஜோகூர் பாருவைச் சேர்ந்த அவரது இரு மகள்களுக்கும் வயது 15 மற்றும் 13. மகனுக்கு வயது 12.

கடந்த ஏப்ரல் 3ம் தேதி லிட்டில் இந்தியாவுக்குச் சென்ற போது தான் அந்த “காதல்” தாள் மணியரசிக்கு கிடைத்தது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 30 காசுகள் தான். எனினும், தாளின் மதிப்பு பெரிதல்ல என்றும் அந்த காதல் சின்னத்தின் மதிப்பு அளவிட முடியாது என்கிறார் மணியரசி.

எனவே, அந்த தாளை சம்பந்தப்பட்ட காதல் ஜோடியிடம் கொண்டு போய் சேர்க்க மணியரசி முடிவு செய்துள்ளார். Malaysia-Singapore Border Crossers(MSBC) 马新过境者 எனும் ஃபேஸ்புக் பக்கத்தில், இந்த தாளின் படத்தைப் பதிவிட்டு, அந்த காதல் ஜோடியை அவர் தேடி வருகிறார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts