TamilSaaga

“ஒவ்வொரு 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை தொற்று இரட்டிப்பாகலாம்” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

சிங்கப்பூர் விரைவில் COVID-19 இன் “மற்றொரு குறிப்பிடத்தக்க அலையை” காணப்போகிறது என்றும் Omicron வைரஸ் இப்போது தினசரி மொத்த தொற்று பாதிப்புகளில் குறைந்தது 70 சதவிகித பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அமைச்சக பணிக்குழுவின் இணைத் தலைவர் கன் கிம் யோங் இன்று (ஜன.21) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரு.கிம் யோங் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், “உண்மையில், 70 சதவிகித பாதிப்பு விகிதத்தை விட ஓமைக்ரான் அதிக பாதிப்பை தினசரி எண்ணிக்கையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அது 90 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். சிங்கப்பூரில் டெல்டா திரிபு வைரஸை விட Omicron அதிகளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளது” என்றார்.

எல்லாவற்றையும் விட கிம் யோங் சொன்ன இந்த வாக்கியம் தான் மிக முக்கியமானது. “ஓமிக்ரான் வைரஸ் மிகவும் வீரியமிக்க இருப்பதால், நாம் விரைவில் ஒரு குறிப்பிடத்தக்க அலையைக் காண்போம்.” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாதிப்புகளின் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – “சிங்கப்பூர் வரும் பயணிகள் கவனத்திற்கு” : VTL சோதனை முறை எளிமைப்படுத்தப்படும் – MOH அறிவிப்பு

| அந்த அறிக்கையில், “ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தொற்று பாதிப்புகள் இரட்டிப்பாகலாம் மற்றும் ஒரு நாளைக்கு 10,000 முதல் 15,000 அல்லது அதற்கும் அதிகமான பாதிப்புகள் எட்டலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. |

பெரும்பாலான ஓமைக்ரான் பாதிப்புகள் “சாதாரணவையாக”, இருக்கிறது. குறிப்பாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் COVID-19 பூஸ்டர் ஷாட்களைப் பெற்றவர்களுக்கு இந்த ஓமைக்ரான் பாதிப்புகள் என்பது குறைவாகவே உள்ளது என்று கிம் யோங் கூறியுள்ளார்.

“ஆக்சிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, தீவிர சிகிச்சை அல்லது இறப்பவர்களின் சதவீதம் டெல்டா அலையின் போது இருந்ததை விட மிகக் குறைவு தான். தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளில் இதுபோன்ற நிலையே நீடித்தது. இங்கு சிங்கப்பூரிலும் அதுவே எதிரொலிப்பதை நாம் காண முடிகிறது” என்று கிம் யோங் மேலும் கூறினார்.

ஓமைக்ரான் தீவிரத்தன்மை குறைவாக இருப்பதால், சிங்கப்பூர் மருத்துவமனைகளில் புற நோயாளிகளை அதிகம் கவனிப்பதை விட, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்று MOH தெரிவித்துள்ளது.

இருப்பினும், Omicron இன் அதிக பரவும் தன்மையை வைத்து நமது பாதுகாப்பில் நாம் அசட்டுத்தனமாக இருக்க முடியாது. ஏனெனில் ஒட்டுமொத்த பாதிப்பின் கட்டுப்பாடற்ற அதிகரிப்பு நமது மருத்துவமனை மற்றும் ICU வார்டுகளை நிர்வகிக்க முடியாத நிலைக்குத் தள்ளக்கூடும்” என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – “தித்திக்கும் கரும்பும், அத்யாவசிய பொருட்களும்” : புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கிய சிங்கப்பூர் IAEC

“கணிசமான விகிதத்தில்” கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கு சிங்கப்பூர் பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கிம் யோங் எச்சரித்துள்ளார்.

ஆக மொத்தம் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சம் என்னவெனில், ஓமைக்ரான் பெரிய அளவில் பரவும் வாய்ப்புள்ளது. அதன் வீரியம் குறைவு என்று நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. அதுவே நமக்கு ஆபத்தாகவும் அமையலாம். ஒவ்வொருவரும் எச்சரிக்கை இருக்க வேண்டும், தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts