TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு வர skilled டெஸ்ட் அடிக்க.. ஏஜெண்டுகள் 3 லட்சம் வரை கேட்குறாங்களா? ஜஸ்ட் 1 லட்சத்துக்குள் செலவு செய்து சிங்கப்பூர் வருவதற்கு என்ன பண்ணனும்?

வெளிநாட்டில் வேலை பார்க்கலாம் என நினைப்பவர்களுக்கு முதல் சாய்ஸாக இருப்பது சிங்கப்பூர். கொஞ்ச நாள் கஷ்டப்பட்டால் ஆயிரக்கணக்காக சம்பாரிக்கலாம் என நினைப்பார்கள் பல இளைஞர்கள். ஆனால் அவர்கள் சிங்கப்பூர் ஆகும் செலவு எவ்வளவு என்பது தான் பெரிய குழப்பமாக இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து ஏஜென்ட் மற்றும் டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வர எவ்வளவு செலவாகுமுனு தெரிஞ்சிக்க இதை படிங்க.

வெளிநாட்டுக்கு வேலைக்கு போகலாம் என முடிவு எடுத்தவுடனேயே ஒருவர் செய்யும் முதல் வேலை ஏஜென்ட்டை தேடுவதாக தான் இருக்கும். அவர் உடனே உங்க பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு நல்ல வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து விடுவார்.

இதில் படிக்காமல் போகிறவர்களுக்கு 2 லட்சத்தில் இருந்து 3 லட்ச ரூபாய் கேட்பார்கள். இவ்வளவு கட்டி சிங்கப்பூர் வந்து ஒரு வேலையில் சேர்ந்தால் இங்கு பெரிய கஷ்டமாகவே இருக்கும். வீட்டுக்கோ மாதம் 20 ஆயிரம் அனுப்பவே திண்டாட வேண்டி இருக்கும்.

டிகிரி படித்தவர்கள் ஏஜென்ட் மூலம் சிங்கப்பூர் போகும்போது அவர்களுக்கு தொடக்கத்திலேயே 4 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை கட்டணமாக வசூலிப்பார்கள். இதில் சிலருக்கு டிக்கெட் கட்டணம் வேறு தனியாக கேட்கப்படும். ஆனால் சம்பளம் கொஞ்சம் அதிகம் என்பதால் சமாளிக்கலாம்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் S-pass ஊழியர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா? செலவே இல்லாமல் வெப்சைட் மூலம் அப்ளே செய்வது எப்படி? detailed report…

அடுத்த வழி என்றால் skilled test தான். தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்து உங்களுக்கு தெரிந்த துறையில் பயிற்சி எடுத்து கொள்ளுங்கள். அதன்பின், டெஸ்ட் வைத்து உங்களை தேர்வு செய்வார்கள். இதில் வழங்கப்படும் சான்றிதழ் 10 வருடம் செல்லும். இதற்கு கட்டணமாக 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்ச ரூபாய் வரை கேட்கப்படுகிறது. சின்ன சின்ன இன்ஸ்ட்யூட்கள் இந்த தொகையை இன்னும் அதிகரித்தும் வாங்கி வருகிறார்கள்.

என்னால காசு கொடுக்க முடியாது. ஆனா படிச்சிருக்கேன். டிகிரி வச்சு தேடுறீங்கனா உங்களுக்கு நல்ல வழி ஒன்னு இருக்கு. சிங்கப்பூரில் வேலை தேட ஆப்ஸ் மற்றும் வெப்சைட்கள் நிறைய இருக்கிறது. அதில் பிரபலமானவை,

Nala employment,

Job street,

JobsDB,

Job bank,

Stjobs,

My career’s future,

இவற்றில் job street தளத்தில் இருந்து அதிக ஊழியர்கள் வேலைக்காக சிங்கப்பூர் வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு spass கொடுக்கப்படும். இதற்கு அதிகபட்சமாகவே 1 லட்சத்திற்குள் தான் செலவு ஆகும்.

மேல் கூறி அனைத்தும் எங்கள் ஆய்வில் கிடைத்த தோராயமான தொகை தான். இதில் உங்கள் இன்ஸ்ட்யூட் மற்றும் ஏஜென்ட் பொறுத்து சற்று மாறுதல்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts