சிங்கப்பூரின் டெமாசெக் (Temasek) பாலிடெக்னிக் தயாரிப்பு மற்றும் தொழில்துறை வடிவமைப்பு மாணவர் லூகாஸ் லீ, 19, தனது இறுதியாண்டு Project-ன் ஒரு பகுதியாக, தற்போது நிலவும் இந்த பெருந்தொற்று காலத்தில், பயனுள்ளதாக இருக்கும் ஒரு பொருளை உருவாக்க விரும்பினார்.
இதைக் கருத்தில் கொண்டு, அவர் “ஏஜிஸ்” (Aegis) என்று அழைக்கப்படும் ஒரு பொருளைக் கண்டறிந்தார். இது self-sanitising-ஆக மட்டுமல்லாமல், அது தொட்டதும் நிறம் மாறும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் மூலம், எந்த இடத்தில் வைரஸ் இருக்கிறது என்பதை நாம் துல்லியமாக கண்டறிந்துவிட முடியும்.
அதாவது, இந்த பொருள் பல அடுக்குகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு thermochromic coating அடுக்குடன், மனித தொடர்புகளின் வெப்பத்தில் வெளிப்படும் போது, அதன் கீழ் இருக்கும் ஒரு layer கருப்பு நிறத்திலிருந்து வெளிர் ஊதா நிறமாக மாற்றுகிறது.
இதன் மேற்பரப்பு அடுக்கு தொழில்நுட்ப நிறுவனமான ACLIV இன் ஆன்டிவைரல் sheet-ஆல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நிறம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு எடுக்கும் நேரத்தில் எந்த நுண்ணுயிரிகளையும் கொல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பாலிடெக்னிக் மாணவர் லீ பேசுகையில், “சுகாதாரத்தை எவ்வாறு காட்சியாக விளக்கலாம் என்பதைக் காண்பிப்பதற்கான சுவாரஸ்யமான வழிகளை நான் தேடிக் கொண்டிருந்தேன். முக்கியமாக இந்தக் கேள்விதான் என்னைச் சிந்திக்கத் தூண்டியது” என்றார்.
பொதுப் போக்குவரத்தில் உள்ள பொதுவான தொடர்புப் பகுதிகளான poles, கைப்பிடிகள் மற்றும் leaning panels ஆகியவற்றில் இந்த self-sanitising பொருளைப் பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் வைரஸ் இருப்பிடங்களை நாம் கண்டறிய முடியும். மேலும் தனது தயாரிப்பை வணிகமயமாக்க SBS டிரான்சிட் போன்ற போக்குவரத்து நிறுவனங்களையும் அணுகியுள்ளார்.
வாழ்த்துகள் பிரதர்!