TamilSaaga

தமிழர்களை சிங்கப்பூரில் ‘தலை நிமிர வைத்த’ லீக் குவான் யூவிற்கு நூற்றாண்டு விழா… பிரம்மாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடுகள் தீவிரம்!

சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆன லீக் குவான் யூவை சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் யாரும் அவ்வளவாக மறக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் ஆதிக்கம் சிங்கப்பூரில் கொடி கட்டி பறப்பதற்கு அடித்தளமிட்டவர் இவரே. சிங்கப்பூரின் ஆரம்பகால கட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழர்களை, நன்றி மறவாத போற்றி சிம்மாசனத்தில் ஏற்றி வைத்த தலைவராவார். அது மட்டுமல்லாமல் சிங்கப்பூர் இன்று இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் இவருடைய பங்கு அதில் இன்றியமையாதது.

அவரது நூறாவது பிறந்தநாள் நெருங்குவதனை ஒட்டி சிங்கப்பூர் அரசு பிரமாண்டமான இலவச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த சாங்கி விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு இவருடைய பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை சாங்கி விமான நிலையத்தில் இவரது பங்களிப்பை எடுத்து கூறும் கண்காட்சியானது பொதுமக்களுக்காக இலவசமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.’ கனவு காணும் துணிச்சல்’ என்ற தலைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் அவருடைய வரலாற்றை கூறும் வீடியோக்கள் பிரம்மாண்ட திரைகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் அவர் பயன்படுத்திய பொருள்கள், ஆவணங்கள் போன்றவையும் காட்டப்பட உள்ளன.

விமான நிலையம் 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை அடைந்த படிப்படியான வளர்ச்சிகள் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த கண்காட்சியை கண்டு களிப்பதன் மூலம் சாங்கி விமான நிலையத்தின் வளர்ச்சியில் இவரது பங்கு தெளிவாக விளங்கும். எனவே சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இந்த கண்காட்சியை கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related posts